உடலுக்கு ஏற்றது புளிக்கும் திராட்சையா அல்லது இனிக்கும் திராட்சையா?

திராட்சை பழத்தில் சுமார் 60 வகையான ரகங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. புளிக்கும் திராட்சை இனத்தைவிட புளிப்பு இல்லாத கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சையே சிறந்த மருத்துவ பலன் கொண்டதாக இருக்கிறது.


விதையுடனும் விதை இல்லாமலும் திராட்சை கிடைக்கிறது என்றாலும் இரண்டிலும் பலன் ஒன்றுதான். சிறுவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உடனடி சத்து தரக்கூடியது திராட்சை.

• திராட்சையில் சுண்ணாம்பு சத்து, புரதம், இரும்பு சத்து, பாஸ்பரஸ் நிரம்பியிருப்பதால் 40 வயதுக்கு மேலானவர்களுக்கு வயது முதிர்வால் வரும் தொந்தரவுகளைக் குறைக்கிறது.

• தொடர்ந்து திராட்சை சாப்பிடுபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும். பித்தம் நீங்கும், ரத்தம் சுத்தமாகும்.

• தினமும் ஒரு கப் திராட்சை ரசம் குடித்து வந்தால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் நாள்பட்ட தலைவலி தீரும்.

• உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள், சிறுநீர் பிரிவதில் பிரச்னை உள்ளவர்களுக்கும் மாமருந்தாக இருக்கிறது திராட்சை.

திராட்சையஐ அப்படியே சாப்பிடுவதும் உலர்ந்த திராட்சையாக சாப்பிடுவதும் ஒரே மாதிரியான பலன்களையே கொடுக்கிறது.  குளிர்ச்சியான உடல் தன்மை  உள்ளவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாது.