இஸ்ரோ சிவன் எந்த ஜாதி? நாடாரா? பிள்ளையா? கூகுளில் தேடித்திரியும் இந்தியர்கள்!

இஸ்ரோ சிவன் எந்த ஜாதி என்பது குறித்து அறிந்து கொள்ள இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவது தற்போது தெரியவந்துள்ளது.


சந்திரயான் 2 திட்டம் பின்னடவை சந்தித்ததை தொடர்ந்து பிரதமர் மோடியை வழி அனுப்ப வந்த இஸ்ரோ சிவன் தன்னிலை மறந்து உடைந்து அழுகிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் மோடி உடனடியாக சிவனை வாரி அணைத்து ஆறுதல் கூறுகிறார். நேற்று முழுவதும் இந்த புகைப்படமும், வீடியோவும் உலகம் முழுவதும் வைரலானது.

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ சிவன் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்கிற பட்டிமன்றம் நடைபெற ஆரம்பித்துள்ளது. இஸ்ரோ சிவனை பலரும் சிவன் பிள்ளை என்கிற ஜாதி அடையாளத்துடன் குறிப்பிட ஆரம்பித்துள்ளனர். அதாவது சிவன் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று கூறி இப்படி பதிவுகள் வெளியாகின.

இந்த நிலையில் சிலரோ சிவன் பிள்ளை என்பதே தவறு. அவர் பெயர் வெறும் சிவன் தான். அவரது தந்தை பெயர் கைலாசவடிவு. இதனால் டாக்டர் கைலாசவடிவு சிவன் என்று தான் அவரது பெயர் இந்திய ஆவணங்களில் உள்ளன. மேலும் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாடார். நாடார் சமுதாயத்தை சேர்ந்த சிவனை பலரும் தெரியாமல் பிள்ளை என்று கூறி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க நேற்று முழுவதும் சிவன் எந்த ஜாதியை சேர்ந்தவர் என கூகுளில் தேட ஆரம்பித்தனர். தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதிலும் சிவன் ஜாதி குறித்து அறிய மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.