உக்கிரமான தெய்வப் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா?

அதி சௌம்ய அதி ரௌத்ராயை என்று தேவியை சாந்தமாக இருப்பவள் என்றும் அதே தேவி மிக உக்கிரமாக விளங்குகிறாள் என்றும் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.


இதன் மூலம் ஒரே பரம்பொருளே பல ரூபங்களில் விளங்குவதை நாம் தெரிந்து கொள்ளலாம். நமக்குத் துன்பங்கள் ஏதேனும் நேராமல் இருக்க வேண்டும் என்பதற்காக தேவி உக்கிரரூபத்தை தரிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. தீயவர்களை அழித்து நல்லவர்களை காப்பாற்றுவதற்காகவே தான் ஆயுதங்களைத் தரிப்பதாக் தேவி கூறுகிறாள்.  

இந்த உண்மையை நாம் அறிந்து கொண்டால் சாந்தமான தெய்வம் என்றும் உக்கிரமான தெய்வம் என்றும் வேறுபடுத்திப் பார்க்க மாட்டோம். உக்கிரமான தெய்வ வடிவங்களை நாம் காணும் பொழுது அந்த தெய்வ சக்திகள் நமக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தீயவற்றை விலக்கி நன்மைகளை அழிப்பதற்கே என்பதை உணர்ந்து தெய்வங்களை அனைத்து வடிவங்களிலும் வழிபடுவதே சிறந்தது.

உக்கிரமான தெய்வங்களை வழிபடுவதில் தவறு இல்லை. நாம் பார்க்கும் பார்வை தான் முக்கியம். நாம் பிரார்த்தனைக்காக யாத்திரை செல்லும் இடங்களில் உள்ள படங்களை எல்லாம் ங்கி வந்து வழிபடக்கூடாது. 

பூஜை அறையில் சுவாமி படங்களுடன், பித்ருக்களின் படங்களை வைத்து வணங்கக்கூடாது. அவர்களது படங்களை, வீட்டில் வரவேற்பு அறை அல்லது படிக்கும் அறையில் வைத்து வணங்குவதே நல்லது.