மூன்றாம் உலகப் போர் வருதோ இல்லையோ, பெட்ரோல் விலை எகிறப் போகுது. கேஸ்!

இன்று அத்தனை உலக நாடுகளையும் பதற வைத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா.


இன்று ஈராக் கொடுத்துள்ள பதிலடியில் 80 அமெரிக்க வீரர்கள் உயிர் இழந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இனி மூன்றாம் உலகப்போர் வருவதை தடுக்க முடியாது என்கிறார்கள். இதுகுறித்து அருள் எழிலன் பதிவு இது.

ஐ.எஸ். ஒழிப்புப் போருக்காக உருவாக்கிக் கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தத்தின் படி ஈராக்கில் தன் படைத்தளங்களை மிகப்பெரிய நிதியைக் கொட்டி உருவாக்கியது அமெரிக்கா. ஐ.எஸ். போர் முடிந்து விட்டது. ஐ,.எஸ் ஒழிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்காவும் அறிவித்து விட்டது. ஐ.எஸ் என்பது பயங்கர ராணுவ அமைப்பு மட்டுமல்ல அது ஒரு சிந்தனை முறையும் கூட.

எப்படி ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் ஒரு ராணுவக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறதோ அப்படியே ஐ,எஸ் ஒரு அமைப்பைக் கொண்டிருந்தது. ஆர்.எஸ். எஸ் சிந்தனை முறை எப்படி இருக்கிறதோ அப்படியே ஐ.எஸ் சிந்தனை முறை இன்னும் செயலூக்கம் மிக்கதாக இருக்கிறது. அது மத்தியகிழக்கில் பலமிழந்திருக்கலாம். ஆனால் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் முறையும் ஐ.எஸ் சிந்தனையின் வடிவம்தான்.

இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் தாக்குதல்கள் எப்படி ஆர்.எஸ்.எஸ் சிந்தனைமுறையோ அப்படியே உலகம் முழுக்க இந்த நிகழ்வுகள் நடந்து வருகிறது. இரட்டைக்கோபுர தகர்ப்பின் பின்னர் அமெரிக்கா இதையே விரும்புகிறது.

இது போன்ற சூழலில்தான் , ஈரான் புரட்சிப்படை தளபதி குவாசிம் சுலைமானியை அத்துமீறி ஈராக்கிற்குள் நுழைந்து அமெரிக்கா கொலை செய்ததற்கு எதிராக புதன் அதிகாலை ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என ஈரான் தொலைக்காட்சியும், 20 பேர் வரை இறந்திருக்கலாம் என ஈராக் செய்திகளும் தெரிவிக்கும் நிலையில், இன்று வெளிநாட்டு அதிமுக்கிய படையினர் இடையே பேசிய ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி.

குவாசிம் சுலைமானியை தியாகி என அறிவித்து நடத்திய உரையில், ‘‘ஈரானை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்து முடித்து விட்டோம். நேற்றிரவும் அவர்களை (அமெரிக்க அரசை) முகத்தில் அறைந்தோம் . இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஊழல் இருப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதற்காகவே நாங்கள் ஆயுதம் ஏந்தியிருக்கிறோம். ஈரான் தேசம் உலகின் கொடுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியுள்ளது’’ என்று பேசினார்.

ஈராக் தன் நாட்டில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது., அமெரிக்க அதிபரோ “நான் நிறைய செலவு செய்து படைத்தளங்களை ஈராக்கில் உருவாக்கி விட்டேன். அந்த பணத்தை எல்லாம் கொடுங்கள். எங்களை வெளியேறச் சொன்னால் ஈரானை விட மோசமான விளைவுகளைச் சந்திப்பீர்கள்“ என ஈராக்கிற்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

ரஷ்யா , பிரிட்டன் தன் படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. இஸ்ரேல் –அமெரிக்கா என அனைத்துமே போருக்கு தயாராகி வருவதாகவே தெரிகிறது. வளைகுடாவில் ஒரு போரை நடத்தியது போல இப்போது ஒரு போரை அமெரிக்காவால் ஈராந் ஈராக்கில் நடத்த முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

வட கொரியா, ரஷ்யா, சீனா, என பல நாடுகள் அமெரிக்காவின் அதிகாரப்போக்கை விரும்பாமல் நிற்கிறது. அமெரிக்க குடிமக்களே போராட்டங்களை துவங்கி விட்டார்கள். பார்போம் நமது சிலிண்டர் எரிவாயு விலை 2000 ரூபாய் ஆகிறதா? பெட்ரோல் விலை 200 ஆகிறதா என்பதை மத்திய கிழக்கில் உருவாக்கியுள்ள பதட்டமே தீர்மானிக்கும்!