திருமாவளவனை எங்கு பார்த்தாலும் செருப்பால அடிங்க..! பிக்பாஸ் காயத்ரி ஆவேசம்! பதற வைக்கும் காரணம்!

பிரபல நடிகை விசிக தலைவர் திருமாவளவனை செருப்பால் அடியுங்கள் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல நடன இயக்குனரும், நடிகையும், பிக் பாஸ் போட்டியாளர் காயத்ரி ரகுராம். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர் ஆவார். சில நாட்களுக்கு முன்னர் தேசிய தலைவர் திருமாவளவன் ஒரு பொதுக்கூட்டத்தில், "நான் மோடிக்கு எதிரானவன். ஆனால் சில மதவெறியாளர்கள் நான் இந்து மதத்திற்கு எதிரானவன் என்பது போன்று சித்தரித்து வருகின்றனர். என்னை பின்பற்றும் 80 சதவீதத்திற்கும் மேலானோர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்" என்று கூறினார்.

சம்மந்தமே இல்லாமல் காயத்ரி ரகுராம் இதற்கு பதில் அளித்துள்ளார். "சார் நடிப்பு பத்தல. கொஞ்சம் க்ளிசரின் போட்டு நடிங்க. இந்துக்கள் இவரை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடிக்கணும்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.