உண்மையில் சுடுகாடு எங்கே இருக்கிறது தெரியுமா?

ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.


அப்போது, மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களைப் பார்த்து, ”நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா ? ” என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவர்கள்,”ஊர் கோடியில் இருக்குது!“ என்று ஒட்டுமொத்தமாக பதில் கூறினார்கள். உடனே, ”ஆடு, மாடு , கோழிகளுக்கு எங்கே இருக்கிறது?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் வாரியார். குழந்தைகள் பதில் தெரியாமல் மிரட்சியுடன் அவரைப் பார்த்தனர்.

அப்போது வாரியார் சிரித்துக்கொண்டே,”இதோ இங்கே இருக்குது! மாமிசம் சாப்பிடும் அனைவருக்கும் அவர், அவர் வயிரே சுடுகாடுஎன்று கூறி வயிற்றை தடவிக் காண்பிக்க, கூட்டத்தில் பலத்த சிரிப்பு எழுந்தது.