கனிமொழி எங்கே? தேடிச் சென்று அருகில் அமர்ந்த மோடி! டெல்லி விருந்தில் பரபரப்பு!

டெல்லியில் எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அளித்த விருந்தில் சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறின.


நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில் அனைத்து எம்பிக்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனை அடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாடாளுமன்றம் முறைப்படி தொடங்கியது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி அனைத்து எம்பிக்களுக்கும் தடல் புடல் விருந்து அளித்தார்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து எம்பிக்களும் சென்று இருந்தனர். காங்கிரஸ் எம்பியான கார்த்திக் சிதம்பரத்தை கூட விருந்தில் பார்க்க முடிந்தது. இதே போல் திமுகவின் கனிமொழியும் மோடி அளித்த விருந்தில் பங்கேற்றார். 

அப்போது காங்கிரஸ்மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துடன் அமர்ந்து கனிமொழி பேசிக் கொண்டிருந்தார். மேலும் சபாநாயகர் ஓம் பிர்லா, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் ஒரு மேஜையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மோடி அனைவரையும் பார்த்து வணக்கம் தெரிவித்தார் மேலும் கனிமொழியை பார்த்து ஓ நீங்கள் இங்கு தான் இருக்கிறீர்களா? என்று கேட்டுள்ளார். தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து கனிமொழியிடம் மோடி தீவிரமாக விசாரித்துள்ளார்.

ஆனால் மோடி அங்கு வந்து அமர்வார் என்று கனிமொழி எதிர்பார்க்கவில்லை. இதனால் கனிமொழியால் சரியாக மோடி கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் மோடி திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து விசாரித்ததாக சொல்கிறார்கள்.

மோடி தனது மேஜையில் வந்து அமர்ந்து தன்னுடன் பேசிக் கொண்டிருந்ததை கனிமொழி மிகவும் பெருமையாக தன்னுடன் இருப்பவர்களிடம் கூறி வருகிறாராம்.