ராசாவை கட்சியில் இருந்து நீக்குவது எப்போது..? அமைச்சர் ஆவேசக் கேள்வி

தி.மு.க. என்றாலே அராஜகக் கட்சி என்பதும் பெண்களுக்கு மரியாதை இல்லாத கட்சி என்பதும் தெரிந்த விஷயம்தான். ஆகவேதான் ஆ.ராசாவை இன்னமும் கட்சியில் இருந்து நீக்கவில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் கொந்தளித்திருக்கிறார்.


சென்னை, மூலக்கொத்தளம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் தாயார் குறித்து ஆ.ராசா இழிவாக பேசியது அவருக்கு எதிராக திரும்பியதால் தான் மன்னிப்பு கேட்கிறார்.

அவர்களின் கட்சியில் எல்லோரும் ஜமீன்தார், பண்ணையார் போன்ற அரசியல் தான் செய்கின்றனர், மக்களாட்சி செய்யவில்லை.பெண்களை இழிவாக பேசிய ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய திமுக, ஆ.ராசாவை நீக்கவில்லை. ராதாரவிக்கு ஒரு நியாயம், ராசாவுக்கு ஒரு நியாயமா? 

அப்படியெனில் திமுக சொல்லி தான் ராசா பேசியதாகவே எடுத்துக்கொள்ள முடியும். ஆ.ராசா பேசியது திரித்து தவறாக பரப்பப்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு அவர் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. இதற்கு விளக்கம் தர முன்வருமா?