இன்று நாட்டையே அவமானத்தில் தலைகுனியச் செய்திருக்கிறது, உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கொடூர சம்பவம்.
உன்னாவ் சிறுமி விவகாரம்! பாஜக எம்எல்ஏவுக்கு தூக்கு எப்போது? புதிய போக்சோ சட்டம் இவருக்குக் கிடையாதா?

ஒரு பெண்ணின் குடும்பத்தையே சீரழித்து சின்னாபின்னமாக்கிய பாஜக எம்.எல்.ஏ.வின் குல்தீப் சிங் செங்கரின் அசிங்கமான வாழ்க்கை தொகுப்பு இது. தன்னிடம் வேலை கேட்டு வந்த 17 வயது பெண்ணை கற்பழிக்கிறது இந்த பாஜக மனித மிருகம். இந்த மனித மிருகத்தின் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது யோகி ஆதித்யாநாத்தின் உ.பி. காவல்துறை!
இதனால் மனமுடைந்த அந்த சிறுமி யோகி ஆதித்யாநாத்தின் வீட்டின் முன்பு நியாயம் கேட்டு தனது தந்தை முன்பாகவே தீக்குளிக்கிறாள். அந்த பெண்ணின் தந்தை மீதே வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் தள்ளுகிறது உபி காவல்துறை!
தீக்குளித்த அந்தப் பெண் காயங்களுடன் உயிர் பிழைக்கின்றாள். அந்த பெண்ணும், அவரது இரு மாமிகளும், அந்த பெண்ணின் வழக்கறிஞர் உடன் காரில் சென்றபோது, திட்டமிட்டு பதிவு எண் மறைக்கப்பட்ட ஒரு லாரியை ஏற்றி அந்த பெண்ணை கொல்ல முயல்கின்றனர்.
இந்த கொலை முயற்சியில், அந்த பெண்ணின் இரு மாமிகளும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழக்கின்றனர். அந்த பெண்ணும், அவளது வழக்கறிஞரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பாஜக எம்.எல்.ஏ.வின் ஆட்கள் என்னை கொல்ல முயல்கின்றனர்; எனவே எனக்கு தகுந்த பாதுகாப்பு தேவை என்று அந்தப் பெண் கடந்த வாரம் உன்னவ் போலீசாரிடம் கொடுத்த புகாரையும் திட்டமிட்டு புறக்கணித்துள்ளது உ.பி. காவல்துறை!
பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் ஆட்கள் என்னை கொல்ல முயல்கின்றனர்; எனவே எனக்கு தகுந்த பாதுகாப்பு தேவை என்று அந்தப் பெண் கடந்த வாரம் உச்சநீதிமன்ற நீதிபதி கோகாய்க்கு எழுதிய கடிதத்தையும் அவரது பார்வைக்குச் செல்லவிடாமல் தடுத்து விட்டனர்!
இவ்வளவு பிரச்சினைக்குப் பிறகு தற்போது இந்தப் பிரச்சினையை உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து கையில் எடுத்துள்ளது! இவ்வளவு பெரிய காமக் கொடூரனும், கிரிமினலுமான பாஜகவின் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் என்பவர் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் அந்தப் பெண்ணின் தங்கைக்கும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தனைக்கும் மௌனம் சாதிக்கிறது மோடியின் அரசு என்பதுதான் வேடிக்கை. போக்சோ சட்டத்தில் மரண தண்டனை கொடுக்கும் வகையில் சட்டத்தை திருத்தும் அரசு, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை பாதுகாப்பதுதான் வேடிக்கை.