தமிழகத்தில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு! ஆனால் டாஸ்மாக் கடைகள் எப்போது திறப்பு? அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தகவலை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த மாதம் 24ந் தேதியுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் தமிழகத்தில் மதுபானங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பிளாக்கில் ஒரு ஃபுல் 4ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஊரடங்கு முடிந்து நாளையுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஊரடங்கை தமிழக அரசு வரும் 30ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதனால் மதுபானக் கடைகள் எப்போது திறக்கப்படும் என்கிற கேள்வி எழுந்தது. தமிழக அரசு காலை மற்றும் மாலை நேரத்தில் சிறிது நேரம் மற்றும் டாஸ்மாக் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் தமிழக அரசு நேற்று அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஊரடங்கு முடியும் வரும் ஏப்ரல் 30ந் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடியே இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களும் தொடர்ந்து செயல்படாது என்றும் ஊரடங்கு முடிந்த பிறகே திறக்கப்படும் என்றும் இதன் மூலம் தெரியவருகிறது.