குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து தான் ஜாதகம் எழுத வேண்டும்! ஏன் தெரியுமா?

ஒரு வருடம் வரை பிறந்த குழந்தையானது கடவுளின் குழந்தையாகப் பார்க்கப்படுகிறது.


நமக்கெல்லாம் ஒரு வருடம் என்பது தேவலோகத்தைப் பொறுத்தவரை ஒரு நாள் மட்டுமே. ஆக இந்த உலகத்தில் பிறந்த குழந்தையானது அந்த ஒரு நாள் மட்டும் கடவுளின் குழந்தையாகப் பார்க்கப்படுகிறது. அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

பிறந்த 3 மாதமே ஆன குழந்தை உறங்கும் போது சிரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்த குழந்தையின் கனவில் கடவுள் வந்து விளையாட்டு காட்டுவதாக நம் வீட்டு பெரியவர்கள் சொல்வார்கள். ஒரு வயது முடியும் வரை அந்த குழந்தைக்கு அட்சதை போட்டு ஆசீர்வாதம் செய்ய மாட்டார்கள்.

குலதெய்வத்தின் கோவிலில் வைத்து குழந்தைக்கு மொட்டை அடித்து அதன் பின்னர் காதுகுத்தி கர்ணபூஷணம் செய்த பின் தனது குழந்தையாக ஸ்வீகாரம் செய்து கொள்கிறார்கள்.

இறைவனின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் குழந்தைக்கு ஜாதகம் எழுதி பலனை நிர்ணயம் செய்ய இயலாது, செய்யவும் கூடாது என்பதால் தான் ஒரு வயது வரை ஜாதகம் எழுதக்கூடாது என்று சாஸ்திரம் அறிந்தவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.