அது தான் உன் புருசன் இல்லைல..! 19 வயது திருமணமான பெண் தனியாக இருக்கும் போது வீட்டுக்குள் நுழைந்த பக்கத்துவீட்டு செல்வராஜ்! பிறகு?

திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில் 19 வயது கொண்ட திருமணமான இளம் பெண்ணிடம் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அந்த இளம்பெண்ணிடம் ” அது தான் உன் புருசன் இல்லைல எனது ஆசைக்கு இணங்கு“ என்று அந்த பெண் தனியாக இருக்கும் போது வீட்டுக்குள் நுழைந்த பக்கத்துவீட்டு நபர் அத்துமீறி நுழைந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண். 19 வயதுயான இவர் தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சணையின் காரணமாக கணவரை பிரிந்து தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்ற நபர் அடிக்கடி நோட்டம் விட்டு வந்துள்ளார். பின்னர் திடீரேன ஒரு நாள் அந்த இளம்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளார் அவர். 

வீட்டிற்குள் நுழைந்த அந்த நபர் அப்பெண்ணிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி கையை பிடித்து இழுத்ததாகவும், தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இதனை வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். 

பின்னர், இது குறித்து அந்த இளம்பெண் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஆனால் அந்தப்புகாரின் பேரில் காவல்துறையினர் எவ்வித உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து நேற்று முன்தினம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.  

போராட்டத்தை அடுத்து, தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த செல்வராஜ் என்பரை கைது செய்தனர். பின்னர் அவர் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பல்லடம் அருகே இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.