இந்த ஆப்களை எல்லாம் பயன்படுத்தினால் உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் துண்டிக்கப்படும்!

ஜிபி வாட்ஸ்அப், வாட்ஸ்அப் பிளஸ் ஆகிய செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று பயனர்களை வாட்ஸ்அப் எச்சரித்துள்ளது.


பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப்பை பில்லியன் கணக்கில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமான வாட்ஸ் அப்பை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிகாரப்பூர்வ தளங்களில் அல்லாமல் ஜிபி வாட்ஸ்அப்,  வாட்ஸ்அப் பிளஸ் ஆகிய செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று பயனர்களை  வாட்ஸ்அப் எச்சரித்துள்ளது.மற்றும் வாட்ஸ்அப் ப்ளஸ் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என அந் நிறுவனம் எச்சரித்துள்ளது.

மீறி பயன்படுத்துவோரின் பயனர் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. வாட்ஸ் அப் இன் குளோனிங் எனக் கருதப்படும் இந்த செயலிகளை பயன்படுத்தினால், பயனர்களின் ரகசிய தகவல்கள் திருடப்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே வாட்ஸ் அப் இன் அதிகாரப்பூர்வமற்ற செயலிகளை பயன்படுத்துவோர் தங்களது தகவல்களை சேமித்து வைத்துக்கொண்டு பின்னர் அதிகாரப்பூர்வ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜிபி வாட்ஸ்அப் பயன்படுத்துவோர், செட்டிங்ஸில் ஸ்டோரேஜ் சென்று தங்களது தகவல்களை சேமித்து வைத்துக் கொண்டு, அந்த ஃபோல்டருக்கு  வாட்ஸ்அப் என பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதிகாரப்பூர்வ செயலி பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். அதிகாரப்பூர்வமற்ற செயலிகள் செல்போனில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.