பெண்களை நிர்வாணமாக வரைவது ஏன்? தமிழ்ப் பெண் ஓவியர் ரம்யா கொடுத்த நெகிழ்ச்சி விளக்கம்..!

நிர்வாண புகைப்படங்களை வரைவதன் மூலம் சமூக வலைத்தளங்களில் ஏற்படும் அவமானங்களை குறித்து ரம்யா சதாசிவம் கூறியிருப்பது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இயற்கை அழகினை வரையும் கலைஞர்களுள் ரம்யா சதாசிவம் முதன்மையானவர். இவர் "நிர்வாணக்கலை ஓவியத்தில்" புகழ்பெற்றவர். தான் வரையும் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இவர் அத்தகைய கலைநயமிக்க ஓவியங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் போது, சிலர் விரும்பத்தகாத பல கமெண்ட்டுகளை பதிவு செய்வதாக கூறப்படுகிறது.

70% பேர் ரம்யாவை தரக்குறைவாக பேசுவதாகவும், 20% பேர் இதனை விட்டுவிடுமாறு அறிவுறுத்துவதாகவும்,வெறும் 10% கலையை கலையாக பார்க்கும் மனோபாவம் கொண்டவர்களாக இருப்பதாக கூறியுள்ளார். புகைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனாலும், இத்தகைய ரசிகர்களின் மனோபாவத்தை மட்டும் மாற்ற இயலவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

வருங்காலத்தில் வித்தியாசம் நிச்சயமாக நிகழும் என்றும், மேற்கூறப்பட்ட நிலை தலைகீழாக மாறும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். நிர்வாண ஓவியக்கலை என்று நம் நாட்டில் மட்டுமே புதிய மனோபாவத்தை கொண்டிருப்பதாகவும், இது அவருக்கு வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். 

மேலைநாடுகளில் "ஃபிகரேட்டிவ்" என்று அழைக்கப்படும் கலையை, நம் நாட்டில் நிர்வாண கலையென்று கொச்சை படுத்துகின்றனர். சிறுவயதிலிருந்தே தனக்கு கலையின் மீது ஆர்வம் இருந்ததாகவும், அதற்கு காரணம் தன்னுடைய தாயார் என்றும் கூறினார். சிறுவயதிலிருந்து அவருடைய வாட்டர் கலர் ஓவியங்களை பார்த்து ஓவியக்கலையின் மீது ஆர்வம் கொண்டதாக கூறியுள்ளார்.

ரம்யா சதாசிவத்தின் பேட்டியானது அனைவரையும் உருக செய்துள்ளது.