பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறையவில்லை என்றால் என்னாகும்?

பிரசவம் நிகழ்ந்த ஆறு மாதங்களுக்குள் ஒரு பெண் பழைய எடைக்கு திரும்பிவிட முடியும். முன்பைவிட 1 அல்லது 2 கிலோ அதிகம் இருப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கது. ஆனால் கர்ப்ப காலத்தில் இருந்த எடை குறையாமல் அப்படியே தொடர்வது நிலையான உடல் பருமனாக கணக்கிடப்படுகிறது. இதனால் தாய்க்கு ஏற்படும் பாதிப்புகளை பார்க்கலாம்.


       • பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறையாத பெண்களுக்கு இன்சுலின் சுரப்புகளில் பெரும் மாற்றம் நிகழ்வதால், டைப் 2 நீரிழிவு நோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்பு உண்டாகிறது,

      • ரத்த அழுத்த பிரச்னையும் அதனால் இதயத்தில் சிக்கல் ஏற்படுவதற்கும் உடல் பருமன் பெண்களுக்கு அதிக வாய்ப்பு உண்டாகிறது.

      • குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் வளர்ப்புமுறைகளிலும் உடல் பருமன் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. இதனால் குழந்தைக்கும் பாதிப்பு உண்டாகிறது.

      • சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களும் உடல் பருமன் காரணமாக ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

        இவை தவிர மீண்டும் கர்ப்பம் தரிப்பது உடல் பருமனான பெண்களுக்கு எளிதில் இயலாத காரியமாக இருக்கிறது. இதுதவிர மூட்டுவலி, முதுகுவலியால் அதிக அவஸ்தையும் ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து எப்படி மீள்வது என்பதை இனி பார்க்கலாம்.