போலீஸ் ஸ்டேசன்லய பொம்பள போலீஸ்க்கு முத்தம் குடுத்த எஸ்.ஐ! அடுத்த என்ன ஆச்சு தெரியுமா?

விருப்பம் இல்லாத பெண்ணுக்கு முத்தம் கொடுத்தால் போலீஸ் பிடித்து கடுமையாக தண்டனை கொடுக்கும். அப்படியிருக்கும் போது ஒரு பெண் போலீஸ்க்கு விருப்பமில்லாமல் முத்தம் கொடுத்தால் என்னவாகும் என்று தெரியுமா?


திருச்சி, சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த பஞ்சாயத்தை வெளியே சொன்னால் வெக்கக்கேடு, சொல்லாமப் போனா மானக்கேடுங்கிற கதைதான். அப்படி என்னதான் நடந்துச்சுன்னு கேட்கிறீங்களா.. ஒண்ணுமில்லே ஜெண்டில்மேன்… ஒரு பொம்பளப் போலீஸைப் பார்த்து ஜொள்ளுவிட்டது மட்டுமில்லாம, முத்தம் குடுத்துட்டார் ஒருத்தர்.

பொம்பளைப் போலீஸ்க்கே ஒருத்தர் முத்தம் குடுத்துட்டாருன்னா, அவரை போலீஸ் டார்டாரா கிழிச்சிருக்குமே என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அப்படி எதுவும் செய்யவே இல்லை. ஏன்னு தெரியுமா? அப்படி பொம்பளைப் போலீஸ்க்கு முத்தம் குடுத்தவர் ஒரு சப் இன்ஸ்பெக்டர் சாதாரண பொதுமக்கள் செஞ்சாத்தானே தப்பு, பெரியவங்க செஞ்சா, பெருமாள் செஞ்சமாதிரி இல்லையா?

 கடந்த 10-ம் தேதிதான் இந்த முத்த சம்பவம் நடந்ததாம். அன்று இரவு சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ரோந்து பணியில் இருந்திருக்கிறார். ரோந்துப் பணியை முடித்துவிட்டு, ஸ்டேஷனுக்கு வந்த பாலசுப்பிரமணியன், அங்கு கம்ப்யூட்டர் பணியில் இருந்த பெண் போலீஸ் கலாவிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேச்சு கொடுத்திருக்கிறார். ஊர் சுற்றிய களைப்பை போக்குவதற்கு ஏதேதோ பேசுகிறார் என்று பெண் போலீசும் அமைதியாக இருந்திருக்கிறார்.


கொஞ்ச நேரத்தில் பாலசுப்பிரமணியன் எல்லை மீறியிருக்கிறார். அதாவது இந்த உலகத்திலேயே உன்னை மாதிரி அழகான, அடக்கமான ஒரு பொண்ணை பார்த்ததே இல்லை என்ற ரீதியில் புரூடா அள்ளிவிட்டிருக்கிறார். அப்போதும் கலா அமைதியாக இருந்ததும், பார்ட்டி படிந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். உடனே தன்னுடைய அடுத்த சேட்டையை எடுத்துவிட்டிருக்கிறார் பாலசுப்பிரமணியன்.

அதாவது இண்டர்நெட்களில் படித்த பலான ஜோக்ஸ்களை சொல்லி அவர் மட்டும் சிரித்திருக்கிறார். அதோடு டபுள் மீனிங்கில் கலா உடலை கண்டபடி வர்ணிக்கவும் செய்திருக்கிறார். எல்லை மீறி எஸ்.ஐ. போவதை அறிந்த பெண் போலீஸ் கலா, இடத்தை காலி செய்ய நினைத்து எழுந்தரித்திருக்கிறார். கலா வெட்கப்பட்டு போவதாக நினைத்த பாலசுப்பிரமணியன், அவரைப் பிடித்து உட்கார வைத்திருக்கிறார். அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை,அடுத்து செய்ததுதான் ஒரு ஏ சமாச்சாரம்.

ஆம், கலாவை கட்டிப்பிடித்து பச்சக் பச்சக் என்று முத்தம் கொடுத்திருக்கிறார். இதனை கொஞ்சமும் எதிர்பாராத கலா, அவரை தள்ளி விட்டிருக்கிறார். உடனே கடுப்பான பாலசுப்பிரமணியன், என்ன பெரிய பத்தினி மாதிரி வேஷம் போடுறே என்று கேட்டதுதான் தாமதம், ஆங்காரமாகி இருக்கிறார் கலா. தன் காலில் போட்டிருந்த ஷூவைக் கழட்டி பால்சுப்பிரமணியனை வாங்குவாங்குவென்று அடித்துப் பொளந்துவிட்டாராம்.

அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, உடனே அந்த இரவிலேயே எஸ்.பிக்கு போன் செய்து, தனக்கு நேர்ந்த அவமானத்தைச் சொன்னதுடன் நில்லாமல் நீதி கேட்டிருக்கிறார். உடனே பாலசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இன்னமும் மேலிடம் போவேன் என்று சொல்லியிருக்கிறார். அதனால் அடுத்த நாள் பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடந்திருக்கிறது.

ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முத்தரசு விசாரணை நடத்தி, நடந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட எஸ்.பி. ஜியா உல் ஹக்கிற்கு அனுப்பிவிட்டார். அதோடு பாலசுப்பிரமணியன் நடத்திய திருவிளையாடல் எல்லாமே ஸ்டேஷனில் இருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்ததாம். அதனையும் ஒரு பிரதி எடுத்து மேலிடத்துக்கு அனுப்பிவிட்டார்.

அதனால் இப்போது பாலசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விசாரணைக்குப் பிறகுதான், அவர் இதேபோன்று ஏற்கெனவே பல பெண் போலீஸ் மட்டுமின்றி, புகார் கொடுக்கவந்த பெண்களிடமும் சில்மிஷம் செய்தவர் என்ற உண்மை வெளியே வந்திருக்கிறது. அதனால் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

ஆனால், ஐ.ஜி. முருகன் மீது ஒரு பெண் போலீஸ் கொடுத்த சில்மிஷப் புகாரே இன்னமும் விசாரணை செய்யப்படவில்லை. அப்படியிருக்கும்போது, பாலசுப்பிரமணியம் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? பெண் விவகாரத்தில் சாதாரண மனிதன் மாட்டினால் வெளுத்து வாங்கும் போலீஸ், இதுபோன்ற சில்மிஷர்களுக்கு கூடுதல் தண்டனை கொடுத்தால்தான் பெண்கள் சுதந்திரமாக இருக்கமுடியும்.