பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ சீட் விற்பனை! எவ வேலுவுக்கு எதிராக கொந்தளிக்கும் முல்லை வேந்தன்!

கடந்தமுறை பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க.வில் இருந்த பழனியப்பன் 74 ஆயிரம் ஓட்டுகள் வாங்கியிருந்தார். இங்கு பாட்டாளி மக்கள் கட்சி 61 ஆயிரம் ஓட்டுகளும், தி.மு.க. 55 ஆயிரம் ஓட்டுகளும் வாங்கியிருந்தன. தே.மு.தி.க.வும் இந்தத் தொகுதியில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஓட்டுகள் வாங்கியிருந்தன.


மேலோட்டமாகப் பார்க்கும்போது அ.தி.மு.க.வுக்கு சாதகமாகத் தோன்றினாலும்  தினகரன் அணியில் இருக்கும் ராஜேந்திரன் குறிப்பிட்ட சதவிகித ஓட்டுகளைப் பிரிப்பார் என்பதால் தொகுதி தி.மு.க.வின் வெற்றி உறுதியாக இருந்தது. அதுவும் முல்லைவேந்தன் இங்கு நிறுத்தப்பட்டால் வெற்றி உறுதி என்று உடன்பிறப்புகள் கருதினார்கள்.

ஆனால், தொகுதி மக்களுக்கும் கட்சிக்காரர்களுகும் யாரென்றே தெரியாத ஆ.மணி என்பவர் தி.மு.க. வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இதற்குக் காரணம் முழுக்க முழுக்க எ.வ. வேலு என்கிறார்கள்.

பெரிய தொகையைப் பெற்றுக்கொண்டு தொகுதியை தாரை வார்த்துவிட்டார் என்று தி.மு.க.வினர் கொந்தளிக்கிறார்கள்.  வேலு இருக்கும் வரை தி.மு.க. உருப்படாது, ஜெயிக்கவேண்டிய தொகுதியில தோற்கப்போறோம் என்று அறிவாலயத்துக்கு புகார் தட்டி விட்டிருக்கிறார்கள்.

இனியாவது ஸ்டாலின் விழித்துக்கொண்டால் சரி.