குழந்தைக்கு இருமல், சளி ஏற்பட்டால் என்ன செய்வது ??

பச்சிளங் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று சளி, இருமல். வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் சளி, இருமல் பிரச்னைகளை முற்றிலும் தடுக்கமுடியாது என்றாலும் முடிந்தவரை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்யலாம்.


·         நீண்ட நேரம் தண்ணீரில் வைத்து குளிப்பாட்டுவது, தலையில் அதிக எண்ணெய் வைப்பதை குறைக்கவேண்டும்.

·         குழந்தை இருக்கும் இடத்தில் புகை, கொசுவர்த்தி போன்றவை வைக்ககூடாது.

·         ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட யாரும் குழந்தையைத் தூக்குவதற்கு அனுமதிக்கக்கூடாது.

·         அதிக குளிர், மழை நேரங்களில் குழந்தைக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வைத்திருக்க வேண்டும்.

காற்றோட்டம் இல்லாத அறை அல்லது அதிக காற்றோட்டம் உள்ள அறையில் குழந்தையை வைத்திருக்கக்கூடாது. எந்தக் காரணம் கொண்டும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது, ஏனென்றால் நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில்தான் அதிகமாக இருக்கிறது.