மல்லையா, நீரவ் மோடி என 50 தொழிலதிபர்களின் ரூ.68,500 கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்தது என்பது உண்மையா?

விஜய் மல்லையா, நீரவ் மோடி என வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் உள்ளிட்ட 50 பெரு நிறுவனங்களின் சுமார் 68ஆயிரம் கோடி ரூபாய் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளதாக விவகாரமாகியுள்ள நிலையில் அதன் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.


இந்த விவகாரம் குறித்து பாஜகவின் நாராயணன் திருப்பதி என்ன கூறுகிறார் என்பதை இப்போது பார்க்கலாம், தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் 68, 607 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். வழக்கம் போல் எதிர்க்கட்சிகள் அனைத்தும் குய்யோ முறையோ என்று கதறி கொண்டிருக்கின்றன. ஐயோ! மோடி அரசின் பெருநிறுவனங்களுக்கு ஆதரவான நிலையை பாரீர் என்று ராகுல் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வங்கி பயன்பாட்டு மொழியில் 'write off' என்றால் தள்ளுபடி என்று அர்த்தமல்ல. 'தள்ளி வைப்பு' என்று அர்த்தம். ஆனால், வேண்டுமென்றே மக்கள் மத்தியில் தவறான கருத்தை கொண்டு சேர்ப்பது அரசியல் அநாகரீகம். 'தள்ளிவைப்பு' என்பது கடன் வழங்கப்பட்ட வங்கிகளின் இருப்பு நிலையில் இருந்து அகற்றப்படுகிறது. வாராக்கடன்களாக அவை இருக்கையில் சொத்துக்களாக பிரதிபலிப்பதால் வங்கிகளின் இருப்பு நிலை பலமாக இருப்பது போன்ற மாயையை உருவாக்குகின்றன. அதிலிருந்து நீக்குவதன் மூலம் வரி சலுகைகள் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க செய்ய வழி செய்கிறது.

சொத்துக்கள் அதிகம் இருப்பதாக இருப்பு நிலை தெரிவிப்பதால், ஆவணப்படி பணம் இருந்தும் மக்களுக்கு மேலும் கடன் வழங்க முடியாத நிலையை உருவாக்குகிற காரணத்தினால் இருப்பு நிலையில் இருந்து அகற்றப்படுகின்றன. சட்டரீதியாக வாராக்கடன்களை வசூலிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடரப்படும். மேலும், தள்ளிவைப்பு நடவடிக்கையின் மூலம் கடனாளியின் கடன் அடைக்கப்பட்டுவிட்டதாக அர்த்தமாகாது. கடனாளிகளுக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகள் வேகமாக தொடரும். வசூலிக்கப்பட்டவுடன், அவை வங்கிகளின் கணக்கில் செலுத்தப்பட்டு இருப்பு நிலையில் லாபமாக கருதப்படும்.

அதாவது ஒரு வங்கியின் இருப்புநிலைக்கு ஏற்ப குறிப்பிட்ட விகிதத்தில் கடன் கொடுக்கவேண்டும். ஆனால் பலவங்கிகள் அவ்வாறு செயல்படுவதில்லை. ஏனெனில் பல கோடிகள் வாராக்கடன்களாக இருந்து வந்தன என்பதே காரணம். ஆகையால், நான்கு வருடங்களுக்கு மேலும் அவை வராக்கடன்களாக இருந்தால் அதை இருப்பு நிலையிலிருந்து 'தள்ளி வைத்து' சொத்துக்களை குறைத்துக்கொள்வதன் மூலம் வரி சேமிக்கப்படுவதோடு, மேலும் மூலதனத்தை கொண்டு வந்து மக்களுக்கு கடன் வழங்க முடிகிறது. இதற்கிடையில் தள்ளிவைக்கப்பட்ட கடன்களை சட்டரீதியாக வசூலிக்கும் நடவடிக்கை தொடரும். வசூலிக்கப்பட்டவுடன் வங்கியின் கணக்கில் லாபமாக சேர்க்கப்படும். 

டிசம்பர் 3,2019 அன்றே, காங்கிரஸ் கட்சியின் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் மாநிலங்களவையில் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.ரூபாய் 80,893 கோடி ரூபாய் பொது மற்றும் தனியார் வங்கிகளால் 'தள்ளி வைக்கப்பட்டுள்ளது' (Writeoff) என்றும் அந்த பட்டியலை வெளியிடுவதில் எந்த தயக்கமும் இல்லை என்றும், அவை ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுளார். அது கடனாளிகளுக்கு பயனளிக்காது என்பதையும் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

'தள்ளுபடிக்கும்' 'தள்ளிவைப்புக்கும்' வித்தியாசம் தெரியாத காங்கிரஸ் மற்றும் இதர எதிர் கட்சிகளை மக்கள் தள்ளுபடி செய்து தள்ளிவைப்பது நலம்.  இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதே போல் ஸ்டாக் மார்க்கெட்டில் புழங்கும் செல்வராஜ் எஸ் என்பவர் தன் பேஸ்புக் பக்கத்தில் ரைட் ஆஃப் என்றால் என்ன என தெளிவாக எழுதியுள்ளார்.


அவர் கூறியிருப்பதாவது, Write off ஆனதற்கு பின் என்ன ஆகும் இது அனைவர்க்கும் இருக்கும் சந்தேகம் write off ஆன தேதியை கணக்கிட்டு அதற்க்கு முன்பு வரை கட்டிய கடன் அசல் தொகையை மட்டும் கழித்து மீதி தொகையே Write off செய்வார்கள் ஒருவர் 1,00,000 கடன் வாங்கி இருந்தால் அவர் கட்டிய அசல் 20,000 கழித்து மீதி 80,000 + கட்ட தவறிய காலத்திற்கான வட்டி தொகையை கனகிடுவர் 

80,000 + வட்டி அல்லது பெனால்டி 40,000 ஆகா மொத்தம் 1,20,000/- என்று கனகிடுவர் தோராயமாக ஐந்து வருடகாலம் என்று எடுத்து கொள்வோம் இந்த கட்ட தவறிய 80,000/- Write offக்கு பின்பு குறைந்த பட்சம்4 Lதில் இருந்து 5 L வரை செல்லும் மல்லையா வாங்கிய கடன் 2000 கோடி தான் ஆனால் அவர் கடன் சரிவர செலுத்தாததால் வட்டியுடன் சேர்த்து பெனால்டி அதற்க்கு வட்டி என்று 9000 கோடி சேர்த்து விட்டது 

இதுவே ஒருவர் கட்ட தவறிய மொத்த கடன் வட்டியுடன் சேர்ந்த கடனே மொத்த கடன், பின் சட்ட பூர்வ நடவடிக்கை மூலம் Write off செய்ய பட்ட தொகை கடன் தாரருக்கு தெரிவிக்க படும் அந்த நோடீசில் தற்பொழுது வரை இருக்கு அசல், வட்டி நிலுவையை தெரிய படுத்தி அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் ஒருமுறை ஒரு கடன் Write off ஆகி விட்டால் அதை மீண்டும் EMI மூலம் கட்ட இயலாது 

ஆகையால் One Time Settlement or Property Freeze அல்லது இரண்டு நடவடிக்கை எடுக்கவே இந்த Write off நடவடிக்கை உதவும் இப்போ மல்லையாவுக்கு வருவோம் அவர் கடனை செலுத்துகிறேன் என்று தான் சொல்கிறார் எவ்வளவு என்றால் அவர் வாங்கிய கடன் + வட்டியை மட்டும்மே அதாவது 2000 கோடியை ஆனால் உண்மையில் அவர் கடனை Write off செய்ததன் மூலம் அதற்க்கு மேலான சொத்து முடக்க பட்டதாலே அவர் வெளிநாடு சென்று ஒழிய வேண்டிய அவலம் 

மொத்தமாக இன்றைய நிலுவை கடன் தொகையான மல்லையா செலுத்த வேண்ட்டிய தொகை 9000 கோடி. இவ்வளவு தான் மக்களே பிரச்சனை இதை மறைத்து தமிழகத்தின் பிரபல நாளிதழ் விவரம் தெரியாமல் அல்லது விவரம் தெரிந்து அரசியலுக்காக எழுதிய செய்தியை வைத்துக் கொண்டு மோடி அரசு தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்துவிட்டதாக புரளி கிளப்பப்பட்டு வருகிறது.