சசிகலா வருகை உறுதிதானா..? சிறையில் இருந்து வெளியே போன விவகாரம் எந்த நிலையில் உள்ளது?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நரசிம்ம மூர்த்தி கேட்ட கேள்விகளின் அடிப்படையில், ‘சிறைப் பதிவுகளின்படி சசிகலாவின் விடுதலை தேதி காலம் ஜனவரி 27ம் தேதி’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


அக்டோபர் மாதமே சசிகலா வெளியே வந்துவிடுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென ஜனவரி மாதம் என்று வெளியாக விவகாரம் குறித்து தினகரன் கட்சியினரிடம் பேசினோம்.

சிறைத்துறை கடிதப்படி, ஜனவரி 27ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குள் அபராதத்தொகையை கட்டிவிட்டு, நன்னடத்தை விதிகளின்படி உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், சசிகலா நவம்பர் மாதமே வெளியே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதேநேரம், முன்பு சிறைத்துறை அதிகாரியாக இருந்த ரூபாவின் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடந்துவிட்டாலும், அதில் என்ன நடவடிக்கை என்று தெரிவிக்கப்படவில்லை. சசிகலா வெளியே வருவதற்கு இடையூறாகவே இந்த நடவடிக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் சட்ட ரீதியான ஆலோசனைகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் டிடிவி தினகரனும், வழக்கறிஞர்களும் சசிகலாவை சிறைக்கு சென்று சந்திக்கிறார்கள். சிறைத் துறையையும் சட்ட ரீதியாக அணுக இருக்கிறார்கள். அதன் பிறகே உறுதியாக எதுவும் சொல்ல முடியும்” என்கிறார்கள்.