கர்ப்பிணி மல்லாக்கப் படுத்துத்தூங்கினால் ஆபத்தா?இதோ மருத்துவரீதியான பதில்..

கர்ப்பம் குறித்தும் வயிற்றில் இருக்கும் சிசு குறித்தும் நிலவும் மூட நம்பிக்கைகள் குறித்து பார்த்துவருகிறோம். அந்த வரிசையில், கர்ப்பிணி மல்லாக்கப் படுத்துத்தூங்கினால் வயிற்றில் சிசுவுக்கு ஆபத்து நேரும் என்று சொல்வது உண்மையா என்பதை பார்க்கலாம்.


• கர்ப்பிணி மல்லாக்கப் படுத்துத்தூங்கினால் வயிற்றில் வளரும் குழந்தை மூச்சுவிட திணறும் என்று சொல்வார்கள்.

• மல்லாக்க படுத்துத் தூங்குவதற்கும் குழந்தை மூச்சு விடுவதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதுதான் உண்மை. கர்ப்பிணி எப்படி படுத்துத் தூங்கினாலும் குழந்தையால் வசதியாக மூச்சுவிட முடியும்.

• ஆனால் மல்லாந்து படுத்து தூங்குவதைவிட ஒரு பக்கம் திரும்பிப் படுப்பதுதான் நல்லது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

• குறிப்பாக இடது கைப்பக்கம் திரும்பிப் படுத்தால் கருப்பை மற்றும் தொப்புள் கொடிக்கு ரத்தவோட்டம் அதிகரிக்கும் என்று ஆலோசனை சொல்கிறார்கள்.

அதனால் கர்பிணிகள் ஆரம்பம் முதலே ஒருபக்கம் சாய்ந்து படுத்துப் பழகுவது நல்லது. மல்லாந்து படுக்கும்போது திடீரென எழுவது பெரும் சிரமமாக இருக்கும். அதனால் முடிந்தவரை ஒரு பக்கம் படுப்பதே நல்லது.