உடல் பருமன் கவலையா! இனிப்பு அதுக்கு எவ்ளோ காரணமா இருக்குனு தெரிஞ்சிக்கோங்க !

பெண்களுக்கு சாக்லேட், ஐஸ்க்ரீம், காபி போன்றவை எப்போதும் விருப்பமாக இருக்கிறது. உடல் பருமனாக இருக்கும் பெண்கள், குறிப்பாக எடையை குறைக்க விரும்புபவர்கள் இனிப்பு சுவையை வெறுத்தே தீரவேண்டும். ஏன் உடல் பருமனாக இருக்கும் பெண்கள் இனிப்பை வெறுக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.


• பொதுவாக அதிக இனிப்பு சாப்பிடுபவர்கள் பழங்கள் விரும்புவதில்லை. அதனால் அவர்களுடைய உடலில் கால்சியம், நார்ச்சத்து, போலட், ஜிங்க், மக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்கள் குறைந்த அளவே சேர்கிறது.

• தொடர்ந்து அதிக இனிப்பு எடுத்துவருபவர்களுக்கு எலும்பு மெலிவு, ரத்த அழுத்தம், இதய நோய், புற்றுநோய் போன்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டாகிறது.

• அதிக இனிப்பு சாப்பிடுபவர்கள் விரைவில் முதுமை அடைவதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

• பெண்களுக்கு மாதவிலக்கு குறைபாடு ஏற்படுவதற்கு இனிப்பும் ஒரு காரணமாக இருக்கிறது. இதனால் அதிக ரத்தப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் உருவாகலாம்.

இனிப்பு உணவுகளை மகிழ்ச்சி தரும் விஷம் என்றுதான் சொல்வார்கள். அதனால் முடிந்தவரை இனிப்பான உணவுகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் என்று சொல்லப்படும் செயற்கை இனிப்புகளும் உடல் பருமனுக்கு ஆபத்து தரக்கூடியதுதான்.