மகனுக்கு சீமான் வைத்த உலகத் தமிழர் போற்றும் கெத்தான பெயர்! என்ன தெரியுமா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மகனுக்கு உலகம் போற்றும் வகையிலான கெத்தான பெயரை வைத்துள்ளார்.


நாம் தமிழர் கட்சியின்சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 6 மாதங்களுக்கு பிறகு சீமான் – கயல்விழி தம்பதிக்கு நேற்று முன்தினம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை தன் கையில் எடுத்து கொஞ்சி மகிழும் புகைப்படத்தை வெளியிட்டு சீமான் புலகாங்கிதம் அடைந்தார்.

   மேலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்களுடம் சீமானுக்கு குழந்தை பிறந்ததை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆங்காங்கே இனிப்புகள் கொடுத்தும், கேக் வெட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சீமான் தனது குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

   ஏனென்றால் சீமான் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து வருகிறார். எனவே தனது குழந்தைக்கு தூய்மையான தமிழ் பெயரை வைக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் சீமானை பொறுத்தவரை தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே முடிவெடுத்துவிட்டார். அதன் அடிப்படையில் தான் தற்போத பெயரும் வைத்துள்ளார்.

   ஆம் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது குழந்தைக்கு தமிழ் ஈழத் தேசியத் தலைர் பிரபாகரனின் பெயரையே சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீமான் பிரபாகரன் மீது பேரன்பு கொண்டவர். மேலும் பிரபாகரன் எனும் பெயரை கூறும் போதே உணர்ச்சி பொங்கும் அவருக்கு. எனவே தனது தலைவன் பெயரையே தனது தனயனுக்கும் வைப்பது என்று சீமான் முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது- விரைவில் மகனுக்கு பெயர் சூட்டும் விழா வைக்க சீமான் திட்டமிட்டுள்ளார்.