விபத்தில் சிக்க காரணமாகும் ஜாதகமும்! ஜோதிடர் கூறும் பரிகாரங்களும்!

நாம் தினசரி செய்திதாளில் தவறாமல் படிக்கும் செய்தி ஒன்று பைக் அல்லது மோட்டார் சைக்கிள் விபத்து இளைஞர் பலி என்று.


தமிழகத்தில் எங்காவது ஒரு பக்கம் திமைும் நடக்கக்கூடிய சம்பவம் என்றாலும் அதன் வலி வேதனை அவர் சார்ந்த குடும்பத்தை சாரும்.ஒரு குழந்தையை பெற்று எடுத்து இரவு பகல் என்று பாராமல் கண் விழித்து வளர்த்து ஆளாக்கி... ஒரு நொடி பொழுது தூக்கி எமனிடம் கொடுத்து விடுகிறார்கள் தாய் தந்தை.

கஷ்டப்பட்டு பணத்தை கொடுத்து ஆசையாய் பைக் வாங்கி தந்த தந்தைக்கு மகன் தரும் பரிசு மரணம் . இளம் ரத்த வேகத்தை பைக் மோட்டார் சைக்கிளிடம் காட்டினால் பைக் அதன் விதி பக்கம் வழியை காட்டுகிறது.இது போன்ற விபத்துக்களில் சிக்கி மரணம் அடையும் நபர்களின் ஜாதகத்தை கொண்டு ஆய்வு செய்யும்போது சில உண்மைகள் தெரிய வருகிறது. அதன்படி .

1. வாகன அதிபதி சனி ஆவார். இதில் கவர்ச்சி நிறைந்த மாடல் ஸ்டைல் வண்டிகளுக்கு அதிபதி சுக்ரன். வாகனத்தால் வருமானம் காண குருவே துணை செய்கிகிறார்

2. வாகன அதிபதி சனி சூரியன் செவ்வாய் ராகு கேதுடன் சேர்க்கை இல்லாமல் இருக்க வேண்டும்

3. சனி, சுக்ரன் நல்ல நிலையில் இருந்தால் நல்ல மாடல் ஸ்டைல் வண்டிகள் அமையும் இவரும் ஏதேனும் பலம் குறைந்தால் பழுதான வாகனமேஅமையும்.

4. சனி கிரகம் சூரியன் செவ்வாய் ராகு, கேது சேர்க்கை பெற்று 6,8,12ல் நின்று இருந்தால் வாகன விபத்து நடைபெறும்.5.6,8,12 க்குடையவர்கள் திசை நடக்க கூடாது 

6. லக்னத்திற்கு பாதகம் செய்யும் கிரகத்தின் திசை நடத்தக் கூடாது.

7. சனி.சுக்ரன் நீசம் பெற்று இதன்திசை நடக்க கூடாது.

8.ஒருவர்க்கு அஷ்டமசனி காலம் அல்லது ஏழரைக் சனி காலம் நடக்கும் போது . 8 க்குடையவன் திசை நடக்கும் போது வாகன விபத்து மரணத்தை தரும்.

9. குரு அஷ்டம ராசியில் வரும் போது சிலர் க்கு வாகன விபத்து மரணத்தை தரும்.

10. ஒருவர்க்கு குரு மட்டும் நன்றாக ஜாதகத்தில் அமைந்து இருந்தால் எவ்வளவு பெரிய வாகன விபத்து நடந்தாலும் அவர் மட்டும் எந்த விதமான காயம் இன்றி உயிர் தப்பி விடுவார்.

மேலும் விபத்தில் சிக்கி உயிர் விட்டவர்க்கு ஜாதகம் ஆயுள் பலம் நன்றாக இருந்தாலும் இறந்தவரின் தாய் தந்தைக்கு புத்திர தோஷம் இருந்து அதன் திசை புக்தி நடப்பில் இருக்கும் போது தவறாமல் தோஷம் அடித்து மரண சம்பவம் நடைபெறும்

வெளியீடு.: இந்திய ஜோதிட ஆய்வு மையம்

R. சூரியநாராயணமூர்த்தி .

செல் : 9443923665 whatsapp : 90809 07727