நீங்கள் யாரை கவர்வீர்கள், உங்களை யார் கவர்வார்? கிரக பலன் இதோ!

நவகிரகம் என்பது ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். பூமியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.


நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன. அவையாவன, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இக்கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்வேறு பலன்களை நமக்கு அளிக்கின்றன. அந்தவகையில், புதனுடன் சேர்ந்து வரும் கிரகங்களின் பலன்களை பற்றி பார்க்கலாம்.

புதன் + குரு : எதிர்பாலின மக்களிடம் அதிக ஆர்வம் கொண்டவர்கள். பயணங்களின் மீது அதிக விருப்பம் கொண்டவர்கள். வாதத்திறமை உடையவர்கள். ஆன்மிக குருக்களின் மீது பற்று கொண்டவர்கள். மற்றவர்களை கவர்வதில் அலாதி பிரியம் கொண்டவர்கள். இவர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வது கடினம்.

புதன் + சுக்கிரன் : மற்றவர்களுக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளக்கூடியவர்கள். இறைவழிபாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள். நினைத்த பணியை செய்து முடிக்கக்கூடியவர்கள். எதிலும் நேர்மையை விரும்பக்கூடியவர்கள். தன்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்கள். அனைவரையும் ஈர்க்கும் குணம் கொண்டவர்கள்.

புதன் + சனி : பெரிய நட்பு வட்டம் கொண்டவர்கள். பொருள் சேர்ப்பதிலும், காப்பதிலும் வல்லவர்கள். எதிலும் சமநிலையுடன் இருக்கக்கூடியவர்கள். கோபம் கொண்டவர்கள். அறிவுரைகளை விரும்பாதவர்கள். தனது முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியவர்கள்.

புதன் + ராகு : புத்திக்கூர்மை உடையவர்கள். சூழலுக்கு தகுந்தாற்போல் தனது முடிவுகளை மாற்றக்கூடியவர்கள். அலைபாயும் மனநிலையை உடையவர்கள். மற்றவர்களின் எண்ணங்களை அறிவதில் வல்லவர்கள். பேச்சுக்கலையில் மன்னர்கள். ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றி மறையும்.

புதன் + கேது : அறிவுக்கூர்மையுடன் செயல்படக்கூடியவர்கள். இறை ஞானம் உடையவர்கள். அனைவரிடமும் பழகக்கூடியவர்கள். துரிதமான செயல்பாடுகளை கொண்டவர்கள். சுக போகங்களை ரசித்து வாழக்கூடியவர்கள்.

மேற்கூறிய அனைத்தும் பொதுவான பலன்களே ஆகும். அவரவர் லக்னங்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.