ரஜினியின் பாதை எங்கே போகுது..? மதத்துக்கு சம்பந்தமில்லாத ஆன்மிக அரசியல் என்றால் என்னங்க சாரே..?

அரசியலில் இறங்குவதாக அறிவித்த பிறகு, இன்று தன்னுடைய மூத்த நிர்வாகிகள் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன் மூர்த்தி ஆகியோரை அழைத்து அடுத்தகட்ட ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த்.


இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழருவிமணியன், கட்சியின் பெயர், சின்னம் உட்பட அனைத்தையும் ரஜினிகாந்த்தான் சொல்வார். ஆன்மீக அரசியல் என்பதை முதலில் சொன்னவர் மகாத்மா காந்தி. அந்த வழியில்தான் ரஜினி செல்வார்.

 ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கும் , மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினியோ , நாங்களோ தற்போது பேசவில்லை. 

முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினி ஏற்கனவே பேசியது அப்படியே நிற்கிறது மற்றவர்களை விமர்சித்து தனது கட்சியை வளர்க்காமல் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கிறார் ரஜினிகாந்த்’ என்று தெரிவித்தார்.

மதமே இல்லாமல் எப்படி ஆன்மிக அரசியல். நல்லாத்தான் குழப்புறாருய்யா.