ஜனதா ஊரடங்கு என்றால் என்ன? ஞாயிற்றுக்கிழமை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டதன் பின்னணி என்ன?

மக்கள் தாங்களாகவே வீடுகளுக்குள் இருந்து பொது இடங்களுக்கு வராமல் தனிமைப்படுத்திக் கொள்வது தான் ஜனதா ஊரடங்கு ஆகும்.


தொலைபேசி மூலம் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்த கால கட்டத்தில் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது.

அத்தியாவசிய பணிகள் தொடர்புடையவர்கள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு ஒன்பது மணி வரை வீட்டை விட்டு வெளியே வர அனுமதி உண்டு. அன்றைய தினம் மாலை 5 மணி அளவில் வீடுகளின் பால்கனி, ஜன்னல், கதவுகள் அருகே வந்து கொரானாவிற்கு எதிராக போராடும் மருத்தவர்களுக்காக பாராட்டுகளை தெரிவிக்கும் வகையில் கரவொலி எழுப்ப வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டார்.

இப்படி ஒரு நாள் மட்டும் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்தால் கொரானாவை கட்டுப்படுத்தி விட முடியுமா? ஆனால் இந்த அறிவிப்பின் நோக்கம் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தங்களை பழக்கிக் கொள்வதற்கான முதற்படி என்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை மக்கள் தங்களை ஒரு நாள் வீடுகளுக்குள் இருக்க பழக்கினால் அடுத்த நாட்களில் கொரானவிற்கு எதிராக போராட வசதியாக இருக்கும்.

இதனால் தான் மோடி ஒரே ஒரு நாள் ஜனதா ஊரடங்கு எனும் மக்கள் ஊரடங்கை பிறப்பித்துள்ளார். இதற்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொருத்து எதிர்கால திட்டங்கள் இருக்கும்.