எலும்புக்குள் என்ன இருக்கிறது? ஏன் தோலுக்கு அடியில் எலும்பு ஒளிந்திருக்கிறது.

இயற்கை நம் எலும்புகளை மிகவும் ஜாக்கிரதையாக தோலுக்கு அடியில் ஒளித்து வைத்திருக்கிறது.


ஏனென்றால், எலும்புகள் மிகவும் வலிமையானவை என்றாலும் மிகவும் எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடியவை. அதனாலே உடலுக்குள் அனைத்து இடங்களிலும் ஒளிந்தே காட்சியளிக்கிறது.

கெட்டியான எலும்புக்குள் குழி போன்ற இடத்தில் "ஸ்பான்ஜ்" (Sponge) அமைப்பு இருக்கிறது. எலும்பின் நடுப்பகுதியில் மென்மையான "மஜ்ஜை" (Bone marrow) இருக்கிறது.

எலும்பு திசுக்களில் உள்ள நார்கள் 'கொலாஜென்' (Collagen) எனும் புரதத்தால் ஆனவை.

தவிர கெட்டியான கால்சியம் கார்பனேட், கால்சியம் பாஸ்பேட் படிமங்கள் (Crystals),  இருக்கின்றன. இந்த கால்சியம் தாது உப்புகள் தான் எலும்புக்கு உறுதித் தன்மையை அளிக்கின்றன.

எலும்புகளின் மஜ்ஜையிலிருந்து ரத்தத்தின் சிவப்பு அணுக்கள் உண்டாகின்றன.