மயங்கி, சரிந்து விழுந்த சேரன்! பதறிப் போன ஹவுஸ்மேட்ஸ்! பிக்பாஸ் வீட்டில் புதுப் பிரச்சனை!

எழுந்து கூட நடக்க முடியாத அளவிற்கு சேரனுக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


பிக்பாஸ் 3-வது சீசன் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. சேரன், லாஸ்லியா, கவின், ஷெரின், முகென், தர்ஷன், சாண்டி ஆகியோர் தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்துவதற்கு காத்திருக்கின்றனர். இன்னும் 12 நாட்களேயுள்ள நிலையில் தங்களுடைய யுத்திகளை கையாண்டு ரசிகர்களிடையே நன்மதிப்பை பெறுவதற்கு அனைத்து போட்டியாளர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.

நாட்கள் நெருங்க நெருங்க பிக்பாஸ் மிகவும் கடுமையான போட்டிகளை அறிவித்து வருகிறார். நேற்று முட்டையை பாதுகாக்கும் போட்டியினை பிக்பாஸ் அறிவித்தார். இரவு முழுவதும் அனைத்து போட்டியாளர்களும் முட்டையை பாதுகாத்து வந்தனர். அவர்களால் கழிப்பறைக்கு கூட செல்ல இயலவில்லை.

இதில் சேரனின் உடல்நிலை மிகவும் மோசமானது. அவருக்கு இடுப்புப் பிடித்துக் கொண்டதால் அவரால் சற்று கூட நகரும் இயலாமை ஏற்பட்டது. முகென், தர்ஷன்,சாண்டி ஆகியோர் சேரனை தூக்கி தரையில் சாய்த்து இடுப்புப் பிடிப்பை சற்று அகற்றினர்.

சேரன் வலியால் துடித்ததை கண்ட பார்வையாளர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.