பாபர் மசூதி இடிப்பில் என்னதான் நடந்தது..? இதனை ஏன் சி.பி.ஐ. கண்டுகொள்ளவில்லை?

1992 பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பிரவீன் ஜெயின் என்கிற ஒரு புகைப்படக்காரரும் ஒரு முக்கிய சாட்சியாவார். அவர் மசூதி இடிப்பு குறித்து என்ன சொல்கிறார் என்று கேட்கலாம்.


பாபர் மசூதி இடத்திற்க்கு டிசம்பர் 5ம் தேதியன்று கரசேவகர்கள் (இந்து தொண்டர்கள்) மற்றும் இந்து தீவிரவாத தலைவர்கள் கூடிவருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, அந்த நிகழ்வை புகைப்படங்கள் எடுக்கும் பணி ஆங்கில பத்திரிகையில் இருந்து எனக்கு ஒதுக்க பட்டிருந்தது. 

ராமர் பிறப்பிடம் என்று இந்து தீவிரவாத தலைவர்கள் நம்பிய இடத்தில் ஒரு கோயில் கட்டுமானத்தை தொடங்க திட்டமிட்டிருந்தனர் என்கிற செய்தி நாடெங்கிலும் பரவியிருந்தது. நாங்கள் மசூதியை தொடமாட்டோம் என்பதையும், முதல் செங்கற்கள் இடுவதைக் குறிக்கும் ஒரு மத விழாவிற்கான கட்டுமானத்தைக் மட்டுமே செய்யப்போவதாக அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.

அந்த சமயத்தில் நான் தொடர்பில் இருந்த ஒரு பாஜக எம்.பி., டிசம்பர் 5 காலை பாப்ரி மசூதியை இடிப்பதற்கான ஒத்திகை இருக்கப் போவதாக என்னிடம் கூறினார். மேலும் அவர் "இந்த நிகழ்வை பார்க்க எந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி மேலிட தலைவர்களிடம் இருந்து எனக்கு உத்தரவு உள்ளது. ஆனால் நீ ஒரு நண்பர் என்பதால், உனக்கு இந்த தகவலை நான் தருகிறேன்," என்று அவர் என்னிடம் கூறினார். 

நான் டிசம்பர் 4, 1992 அன்று பனிமூட்டமான மாலை அயோத்திக்கு வந்தேன். அடுத்தநாள் மசூதி இடத்திற்குப் போனேன் , அந்த சமயத்தில் நான் ஒரு கரசேவா தொண்டராக வேடமிட்டிருந்தேன் (என் சட்டையில் ஒரு விசேஷ அடையாள அட்டை மாட்டியிருந்தேன் - ஒரு குங்குமப்பூ துணியால் செய்யப்பட்ட ஒரு சிறப்பு நுழைவு பேட்ஜ் அது -என்னை மற்றுமொரு கரசேவா தொண்டர் அங்கிருந்த அந்த ஆயிரகணக்கான தொண்டர்கள் கூடியிருந்த மைதானத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றார். 

அந்த மைதானம் ஒரு கால்பந்து மைதானம், மசூதியிலிருந்து சில கெஜம் தொலைவில்தான் இருந்தது. குங்குமப்பூ தலைக்கவசம் மற்றும் பேட்ஜ் அணிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு கூடியிருந்தனர். பேட்ஜ் அணிந்த தொண்டர்களால் அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. என்னை ஒரு குறிப்பிட்ட இடத்திற்க்கு அழைத்துச்சென்ற அந்த தொண்டர் …

"இந்த இடம்தான் இப்போது நடக்கப்போகும் இடிப்புக்குகான புகைப்படங்களை நீங்கள் எடுக்க நல்ல இடம் இதுதான் என்றும். என்னுடன் நெருக்கமாக இருங்கள், மற்ற தொண்டர்களைபோல் நீங்களும் கோஷங்களை எழுப்புங்கள், இந்த முறையில்தான் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்" என்று அந்த தொண்டர் என்னிடம் கூறினார். 

திடீரென்று என் முன்னாள் வந்த ஒருவர் என் கேமராவை கீழே வைக்குமாறு சைகை காட்டினார் . நான் சிறப்பு விருந்தினர் என்று, எனது பேட்ஜை சுட்டிக்காட்டி எல்லோரையும் போல சத்தமாக முழக்கங்களை எழுப்பினேன். அவர் தலையசைத்து, தொலைவில் சென்றுவிட்டார். நான் என் கேமராவை கிளிகிக்கி கொண்டு, என் முன் வெளிப்படும் நம்பமுடியாத காட்சியின் படங்களை எடுக்கத் தொடங்கினேன். நூற்றுக்கணக்கான இளம் வயது ஆண்கள் சுத்தியல்,கோடாலிகள், இரும்புக்கம்பிகள் கொண்டு மசூதியின் மிக பிரமாண்டமான உருண்டைவடிவ கோபுரத்தை உடைத்து இழுக்க ஆரம்பித்தார்கள், எல்லாமும் ஒரு திட்டமிட்ட வடிவத்தில் நடந்தேறிக்கொண்டிருந்தது. 

இந்த சுத்தியல், கோடாலிகளைக்கொண்டு உடைத்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள் வெறும் தொண்டர்கள் மட்டுமல்ல ஒரு கைதேர்ந்தே கட்டிடங்களை உடைத்து பழகிய ஒரு கைநேர்தியடைய தொழிலாளர்கள் என்றுதான் நான் சொல்வேன் அவ்வளவு நேர்த்தியாக உடைத்துக்கொண்டிருந்தார்கள்.

சிலமணிநேரங்களில் அந்த மசூதி இருந்த இடம் வெறும் தரையாகிவிட்டது. காமெராவை மறைத்துக்கொண்டு அங்கிருந்து வெகு வேகமாக நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வைத்து சேர்ந்தேன், அதேநேரம் வெளியே கலவரம் நடக்கத்தொடங்கிவிட்டது. அந்த மசூதி இடிக்கப்பட்ட நாளில் நான் ஒரு இந்து மதத்தை சார்ந்தவன் என்ற வகையில் மிகவும் வெக்கப்பட்டேன். என்று கூறியுள்ளார். அந்த படங்கள்கூட செயல் இழந்ததுதான் வேதனை.