சிறுமுகையில் தயாரான ஸ்பெசல் பரிசு! ஜின்பிங்கை குஷிப்படுத்திய மோடி! கோவை கனெக்சன்!

சீனா அதிபர் ஜின்பிங்க்கு பிரதமர் மோடி அளித்த பரிசா எனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


சீன அதிபர் ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். சென்னை புறநகரான மாமல்லபுரத்தில் சீன அதிபரும், இந்திய பிரதமரும் சந்தித்து கொண்டனர். மாமல்லபுரத்தின் வரலாற்று அழகை நரேந்திர மோடி அவர்கள் ஜின்பிங்குக்கு எடுத்துரைத்தார்.

இருவரும் நேற்று மாலை மாமல்லபுரம் கடற்கரையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் கண்டுகளித்தனர். வழக்கம் போல இல்லாமல் இந்திய பிரதமர் மோடி சீன அதிபருக்கு புதுவிதமாக பரிசுகளை வழங்கியிருந்தார். சீன அதிபர் முகம் பொதிந்த பட்டு சால்வை, தமிழ்நாடு கைவினை பொருள்கள் சங்கம் தயாரித்த நாச்சியார் விளக்கு மற்றும் தஞ்சை ஓவியம் ஆகியவற்றை பரிசாக அளித்தார்.

இந்த பரிசுப்பொருள்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.