தண்ணீர் பஞ்சத்தில் இருந்து தப்பிக்க உதவும் மந்திர புஷ்பம்! தினமும் உச்சரியுங்கள்! மழை கொட்டும்!

நம் மாநிலத்தில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் ஒவ்வொரு கால பூஜையின் போதும் வேதவிற்பன்னர்கள் நான்கு வேதங்களில் இருந்து வாக்கியங்களைச் சொல்லி இறைவனுக்கு நிவேதனம் செய்வார்கள்

இதனை தொடர்ந்து ’யோபாம் புஷ்பம் வேதா’ என்று துவங்கும் மந்திர புஷ்பம் என்ற மிக உயர்வான மந்திரத்தை சொல்லி இறைவனை வேண்டுவார்கள். இந்த நடைமுறையை பின்பற்றி வந்தாலே நம் மாநிலத்தில் பிரதி மாதம் மும்மாரி பெய்யும். மாதம் மும்மாரி என்றால் பத்து நாட்களுக்கு ஒரு முறை மழை பெய்வது.

சரியான நேரத்தில் சரியான அளவில் மழை பெய்ய வேண்டும் என்பதனைக் கருத்தில் கொண்டு சோழ மன்னர்கள் தங்கள் சோழ மண்டலம் முழுவதிலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஆலயங்களை எழுப்பி அதன் அருகிலேயே குளங்களையும் வெட்டி வைத்தார்கள். நித்தியப்படி பூஜைக்கும், வேத விற்பன்னர்களின் ஜீவிதம் நடக்கவும் ஆலயத்தின் பெயரில் நிலங்களை பட்டயம் செய்து வைத்தார்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஆலய அர்ச்சகர்கள் தவிர வேதம் கற்ற பண்டிதர், ஓதுவார், மடைப்பள்ளி பணியாளர் என்று இறைவனின் தொண்டிற்காக பணியில் அமர்த்தப்பட்டு இருந்தவர்கள் யாரும் தற்போது அந்தப் பணியில் இல்லை. இதனால் அவர்களுடைய பணிகள் நடக்காமல் நின்று போகிறது. ஆலயங்களில் சரிவர பூஜைகள் நடைபெற்று வந்தாலே பஞ்சம் என்ற பேச்சு எழாது.

ஒவ்வொரு கால பூஜையின் நிறைவாக ஓதப்படும் இந்த மந்திர புஷ்பம் என்பது நீர், நிலவு, நெருப்பு, காற்று, சூரியன், நட்சத்திரங்கள், மேகங்கள், மழையை தரும் காலங்கள் போன்ற இயற்கை சக்திகளுடனான தொடர்பினை மனிதன் அறிய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. இந்த தண்ணீரை அனைத்திற்கும் ஆதாரம் என்பதை வேதம் நமக்கு மந்திரத்தின் மூலமாக அறிவுறுத்துகிறது.

இறைவனுக்கு அவனது உருவங்களாக, அவனது வெளிப்பாடுகளாக உள்ள நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் உள்பட அனைத்து சக்திகளையும் நாங்கள் மதிப்பதோடு அவற்றை தன்னலமின்றி பொதுநலன் கருதி இறைவனுக்கு சமர்ப்பணம் செய்கிறோம் என்று தெரிவிப்பதே இந்த மந்திர புஷ்பம் சொல்லி வணங்குவதன் பொருள். இந்த மந்திரம் சொல்லும்போது விலைமதிப்பற்ற இயற்கை பொருட்களால் நாம் இறைவனுக்கு ஆராதனை செய்கிறோம் என்ற சிந்தனையே நம்முள் இருக்க வேண்டும். அவ்வாறு பக்தி சிரத்தையோடு ஆலயங்களில் வழிபட்டு வந்தோமேயானால் தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வருண பகவானுக்கு உரிய காயத்திரி மந்திரத்தை தினமும் காலையில் குளித்தவுடன் வீட்டுப் பூஜையறையில் அமர்ந்து தங்களால் முடிந்த எண்ணிக்கையில் ஜபம் செய்யலாம்.

ஜூம்பகாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி

தந்நோ வருண ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினமும் வருண பகவானின் அருளைப் பெற வேண்டி ஜபம் செய்வோமாக!