ஐயப்பனுக்கு மாலை போடப் போறீங்களா? இதோ அதற்கான ஐதீகம்!

இன்று கார்த்திகை மாதம் 1ஆம் தேதி. பக்தர்கள் அதிகாலையிலேயே குளித்து முடித்து கோவில்களில் மாலை அணிந்து விரதமிருக்க ஆயத்தமாகி வருகின்றனர்.


கார்த்திகை மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாளன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது. சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து, மார்கழியில் அதாவது, 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.

கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிய வேண்டும். அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை, அல்லது சபரிமலைக்கு செல்லும் தினத்திற்கு முன் 41 நாட்கள் விரதம் கடைபிடிக்கும் படியாக நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். சபரிமலைக்கு மாலை அணிய விரும்புபவர்கள் ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் கடைபிடிக்க வேண்டும்.

விரதத்தைத் தொடங்குவதற்கு முன், 54 அல்லது 108 மணிகள் உள்ள துளசி மணிமாலை அல்லது ருத்திராட்ச மாலையை, ஏதேனும் ஒரு கோவிலில், குரு சுவாமியின் திருக்கரங்களால் அணிந்து கொள்ள வேண்டும். குரு சுவாமி இல்லாத பட்சத்தில் கோவிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று மாலை அணிந்து கொள்ளலாம் அல்லது வீட்டிலேயே பூஜை செய்து தாயின் கரத்தால் மாலை அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்த பக்தர்கள் ஐயப்பமார்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.

மாலையை தேர்வு செய்யும்போது கவனமாக இருக்கவேண்டும். மாலை துளசி மாலையையும், ருத்ராட்சி மாலையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மாலைகளில் கண்டிப்பாக 108 மணிகள் இருக்கவேண்டியது கட்டாயத்மாகும். ஐயப்பன் ஹரிஹர புத்திரன் என்பதால், துளசி மற்றும் ருத்ராட்சம் என இரண்டு மாலையையும் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

மாலை செம்பு, வெள்ளியால் ஆனதென்றால், பல ஆண்டுகளுக்கு அணிந்து பயன்படுத்திக்கொள்ள முடியும். மாலையை அணிவதற்கு முன்பாக பூஜையறையில், சுத்தமான பசும்பாலில் ஊறவைக்க வேண்டும். மாலை அணியும்போது கீழ்கண்ட ஐயப்பனின் மூல மந்திரத்தை மனதார சொல்ல வேண்டும்.

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம் வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம். மாலை அணிந்தபின் கடுமையான பிரம்மசர்ய விரதத்தை கடைபிடிக்க வேண்டும். விரத நாட்களில் புறத்தூய்மை அவசியம். அதனால் தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி, ஐயப்பனைத் தொழுது, ஐயப்பன் பாடல்களை பாடலாம்.

நாள்தோறும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும். காலை, மாலை என இரு வேளைகளிலும் நீராடி, பஜனை வழிபாடு செய்ய வேண்டும். ஐயப்பனை நினைத்து விரதத்தை மேற்கொண்டால் சகல துன்பங்களையும் நீக்கி நம்மை காத்தருள்வார்.

ஐயப்ப ஸ்லோகம்:

இதம் ஆஜ்யம், கமமண்டல

கால மகரகால பரஹமசியவ்ர

தேன ஹரிஹர புத்ர தர்ம

சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி

பொருள் : ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் சுவாமிமார்களான நாங்கள் அறிந்தும், அறியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து, பதினெட்டுப் படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.