கர்ப்பிணிக்கு மட்டுமின்றி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ரத்த அழுத்தத்தால் என்ன சிக்கல் வரும்?

உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதன் காரணமாக கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதையும் பொதுவாக 20 வாரத்திற்குப் பிறகே இந்த நோய் தென்படுகிறது என்பதையும் பார்த்தோம். எந்த வகையில் கர்ப்பிணியை பாதிக்கும் என்பதைப் பார்க்கலாம்.


·         ரத்த அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக இதயம் பாதிக்கப்பட்டு பல்வேறு பிரச்னைகள் உண்டாகலாம்.

·         ரத்தஅழுத்தம் மாறுபடுவதன் காரணமாக மூளையில் உள்ள ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு வெடிக்கவும் உயிருக்கு ஆபத்து உண்டாகவும் செய்யலாம்.

·         சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக கடுமையான வலி, அவஸ்தையை கர்ப்பிணி அனுபவிக்க நேரலாம்.

·         எக்லாம்சியா எனப்படும் வலிப்பு நோய் ஏற்படுவதற்கும் உயர் ரத்தஅழுத்தம் காரணமாக அமைகிறது.

இதுதவிர கல்லீரல், நுரையீரல் பாதிப்பும் ஏற்படலாம். அதனால் குடும்பத்தில் யாருக்கேனும் உயர் ரத்தஅழுத்தம் இருந்தால் அல்லது உயர் ரத்தஅழுத்த வாய்ப்பு இருப்பவர்கள் முன்கூட்டியே மருத்துவரிடம் கலந்துபேசி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியது அவசியம்.