சைலன்ட் கில்லர் என்று அழைக்கப்படும் உயர் ரத்தஅழுத்தம் இருப்பதே பலருக்கும் தெரியாது என்று ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். ஆனாலும் ஒருசில அறிகுறிகளை கவனித்தால் நிச்சயம் முன்கூட்டியே இந்த பாதிப்பினை கண்டறிய இயலும்.
உயர் ரத்தஅழுத்த அறிகுறிகள் எப்படியிருக்கும் ??

• சிறுநீரில் கூடுதல் புரோட்டீன் இருத்தல் அல்லது சிறுநீரகத்தில் வலி, தொற்று தென்படுதலை முதல் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.
• அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்படுவதும், திடீரென பார்வைக்குறைபாடு உண்டாவதும் இதன் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
• மயக்கம், வாந்தி ஏற்படுவதும் மிகவும் குறைந்த அளவு சிறுநீர் வெளிவருவதும் இதன் அறிகுறிகளாகும்.
• மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதும், நுரையீரலில் சளி சேர்வதும் அறிகுறிகளாக இருக்கலாம்.
இவை தவிர ரத்தத்தில் பிளேட்லட் குறைவதும், கல்லீரல் செயல்பாடு குறைவதும்கூட அறிகுறிகளாக இருக்கலாம். ரத்த அழுத்தத்தை அளவிடும்போது 140/90 என்று அதிகரித்தாலே எச்சரிக்கை அடைந்துவிட வேண்டும்.