லிச்சி பழத்தில் இப்படிப்பட்ட சத்தும் இருக்குதா!! முழு விவரத்துடன் இந்த செய்தி !

சாப்பிடத்தூண்டும் வகையில் ரோஸ் வண்ணத்தில் கிடைக்கக்கூடிய லிச்சிப் பழம் கோடை காலங்களில் அதிக அளவு கிடைக்கக்கூடியது. சீனாவை பூர்வீகமாக கொண்ட லிச்சிப் பழம் இப்போது இந்தியா மற்றும் வங்க தேசத்தில் அதிகம் விளைகிறது.


ரோஸ் நிற தோலுக்கு உள்ளே இருக்கும் வெள்ளை நிறப் பழத்தை மட்டுமே சாப்பிட வேண்டும். புரதம், நார்ச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தையாமின் போன்ற சத்துக்கள் லிச்சியில் இருக்கின்றன.

• நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ஜீரணத்தை எளிதாக்கி மலச்சிக்கலை கட்டுப்படுத்துகிறது.

• வைட்டமின் சி சத்து நிரம்பியிருப்பதால் சளி, இருமல் போன்றவைகளுக்கு எதிரே செயலாற்றுகிறது. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

• கால்சியம் சத்து நிரம்பியிருப்பதால் பல் ஆரோக்கியம் மற்றும் எலும்பு வலிமைக்கு மிகவும் நல்லது.

• தினம் ஒரு லிச்சிப் பழம் சாப்பிட்டு வந்தால் சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பிக்க இயலும்.

உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக இயங்கவைப்பதற்கான அத்தனை சத்துக்களும் லிச்சியில் இருப்பதால் தொடர்ந்து சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாம்.