கர்ப்பிணிகள் தினமும் தியானம், யோகா செய்ய வேண்டியது கட்டாயம்! ஏன்னு தெரியுமா?

நாம் எத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் சில வேளைகளில் சில பிர்ச்னைகளைத் தவிர்க்கவே முடியாது.


அதன்படி எதிர்பாராத வகையில் கர்ப்பிணிக்கு உயர் ரத்தஅழுத்த பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம்.

•கர்ப்பகாலத்தில் மருந்துகள் எடுப்பது கருவை பாதிக்கும் என்றாலும் உயர் ரத்தஅழுத்தத்திற்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். 

• தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் வலிப்பு அல்லது நெஞ்சு வலி போன்ற பிரச்னைகள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு. 

• மருந்து எடுத்துக்கொள்வதை தானாகவே குறைப்பது அல்லது நிறுத்துவது ஆபத்தை உண்டாக்கும் என்பதால் மருத்துவர் ஆலோசனை படியே செயல்பட வேண்டும்.

• உடல் எடையை குறைப்பதற்கு டயட் மற்றும் பயிற்சிகளையும் மருத்துவர் ஆலோசனையுடன் மேற்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணியின் மனமும் உடலும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கவேண்டியது அவசியம். நல்ல ஓய்வும், தூக்கமும் அவசியமாகும். அனைத்துவிதமான மன அழுத்தங்களில் இருந்தும் கர்ப்பிணி விடுபட வேண்டும் என்பதால் தியானம், யோகா, நடைபயிற்சி, இசை கேட்டல் போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது.