தாயுடன் உறங்கிய 2 ½ வயது அம்ருதாவுக்கு நள்ளிரவில் நடந்து என்ன? அதிர வைக்கும் தகவல்கள்!

தாயுடன் வீட்டில் நள்ளிரவில் உறங்கிய இரண்டரை வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.


கோவை அன்னூர் அருகே உள்ள கரிய கவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ். இவர் ஜேசிபி எந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். நிதி நிறுவனமும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவரது மனைவி பெயர் காஞ்சனா. இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ருதா என்கிற குழந்தை உள்ளது.

நேற்று இரவு கனகராஜ் வீட்டிற்கு அவரது மனைவியின் பெரியப்பா மற்றும் சித்தப்பா குடும்பத்தினர் வந்துள்ளனர். இதனை அடுத்து அவர்களுக்க நேற்று தடல் புடல் விருந்து கொடுக்கப்பட்டது. நன்றாக சாப்பிட்ட பிறகு இரவு பத்து மணி அளவில் அனைவரும் உறங்கச் சென்றுள்ளனர்.

காஞ்சனா தனது கணவர் மற்றும் குழந்தை அம்ருதாவுடன் தனது அறையில் உறங்கியுள்ளார். குழந்தை அம்ருதாவை வழக்கம் போல் தனக்கு அருகே படுக்க வைத்த உறங்க வைத்துள்ளார் அம்ருதா.

இந்த நிலையில் அதிகாலை நான்கரை மணி அளவில் வழக்கமாக வரும் பால்காரர் வந்து வீட்டுக் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவை திறக்க காஞ்சனா எழுந்துள்ளார்.  அப்போது தனக்கு அருகே குழந்தையை காணாததை கண்டு அதிர்ந்த அவர் அலறியுள்ளார்.

காஞ்சனா அலறல் சப்தத்தை கேட்டு வீட்டில் இருந்த அனைவரும்எழுந்தனர். ஆளுக்கு ஒரு பக்கமாக சென்ற தேட குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை அடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் தங்கள் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

அப்போது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பாழடைந்த கிணற்றில் சிறுமி அம்ருதா சடலமாக கிடந்துள்ளார். அதற்கு அருகே மதுபாட்டில்கள், போர்வை மற்றும் பாய் போன்றவையும் இருந்துள்ளது. உடனடியாக சடலத்தை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மாயமானது எப்படி மாயமான குழந்தை கொலை செய்யப்பட்டது எப்படி என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கனகராஜ் தனது வீட்டில் நாய்கள் வளர்ப்பதை போலீசார் தெரிந்து கொண்டனர்.

தெரிந்தவர்கள் யாரேனும் வந்திருந்தால் மட்டுமே நாய் குறைத்திருக்காது. நள்ளிரவில் தெரியாத நபர்கள் வந்திருந்தால் நிச்சயம் நாய் குரைத்திருக்கும். எனவே நள்ளிரவு நாய் குறைப்பு சப்தத்தை கேட்கவில்லை என்று கனகராஜ் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து வீட்டில் இருந்த அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர். முக்கியமாக குழந்தை தந்தை கனகராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் காஞ்சனாவின் பெரியப்பா மகன் ரகுநாத் மற்றும் சித்தப்பா மகன் பூபதி ஆகியோரையும் போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர்.

காஞ்சனாவின் தாய் பெயரில் பல கோடி ரூபாய் சொத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது. அது தொடர்பான தகராறில் குடும்பத்தில் உள்ளவர்களே இந்த கொலையை அரங்கேற்றியிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடைய குழந்தையின் தாய் காஞ்சனா உறவினர் ஒருவருடன் நெருங்கிப் பழகியதாகவும் அது தொடர்பாக பிரச்சனை இருந்ததாகவும் சொல்கிறார்கள். எனவே அந்த நபர் மீதும் போலீசாரின் சந்தேக பார்வை திரும்பியுள்ளது.