ரஹானே விஹாரி அசத்தல்! வெற்றியை நோக்கி இந்திய அணி!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது .


முன்னதாக தனது முதல் இன்னிங்சில் தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 299 ரன்கள் முன்னிலை பெற்றது . 

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது .அதிகபட்சமாக ரஹானே 64 ரன்களும் ,விகாரி 53 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர் 

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக 468 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது .இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்களை எடுத்துள்ளது . இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசமாகி உள்ளது.