மேற்கிந்திய தீவுகள் அணியை தெறிக்கவிட்ட விஹாரி ,பும்ரா!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது.


முன்னதாக தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 416 ரன்களை குவித்தது . இந்திய அணியின் அனுமா விஹாரி சிறப்பாக விளையாடி 111 ரன்களை குவித்தார் . மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாசன் ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது .