மேற்கிந்திய தீவுகள் அணியை பந்துவீச்சில் மிரட்டி தெறிக்கவிட்ட இஷாந்த் சர்மா!

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.


முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்தது .இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.சிறப்பாக விளையாடிய ரவிந்திர ஜடேஜா 58 ரன்களை எடுத்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை எடுத்துள்ளது .அந்த அணியின் ராஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 48 ரன்களை எடுத்தார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .