இந்திய பவுலர்களை கதற வைத்து மாஸ் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி! சேப்பாக்கத்தில் ரசிகர்கள் ஏமாற்றம்!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர் ரோகித் ஷர்மாவும், ஸ்ரேயஸ் ஐயர் இருவரும் நிதானமாக ஆடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

நிதானமாக ஆடிய ரோகித் சர்மா 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ரிஷாப் பாண்ட் , ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 71 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். 

இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அம்ரீஷ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் பின்னர் களமிறங்கிய ஹெட்மயரும் தொடக்க ஆட்டக்காரரான சாய் ஹோப்பும் அபாரமாக ஆடி மேற்கிந்திய தீவுகள் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

அபாரமாக ஆடிய ஹெட்மையர் 139 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். சாய் ஹோப் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 102 ரன்களை எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். 

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக இந்திய அணியை வீழ்த்தியது.