கைக்கு வந்த கேட்ச்களை கோட்டை விட்ட இந்தியா அணி! அசால்டாக வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஷிவம் டுபே அதிரடியாக ஆடி இந்திய அணியின் ரன்னை மளமளவென உயர்த்தினார். 

சிறப்பாக விளையாடிய சிவம் 30 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 22 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக பந்துவீசிய வால்ஸ் மற்றும் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கத்தில் நிதானமாக ஆடினாலும் பின்னர் அதிரடியாக ஆடி இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

இந்திய அணி வீரர்கள் கைக்கு வந்த கேட்ச்களை கோட்டை விட்டனர். மேற்கு இந்திய தீவுகள் அணியின் சிம்மன்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 67 ரன்களை குவித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.