இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்துள்ளது.
பதுங்கி பாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி! மெர்சல் காட்டிய பூரன், பொல்லார்டு! பதிலடி கொடுக்குமா இந்தியா?
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கட்டாக்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
எனினும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆட்டக்காரர்கள் ஆட்டம் போகப்போக அடித்து ஆட ஆரம்பித்தனர். குறிப்பாக பூரன் மற்றும் கிரன் பொல்லார்ட் ஜோடி அபாரமாக விளையாடி இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. அபாரமாக விளையாடிய பூரன் 64 பந்துகளில் 89 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
பொலார்ட் ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 74 ரன்கள் குவித்து மேற்கிந்திய தீவுகள் அணி 315 ரன்களை குவிக்க உதவினார்.இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவதீப் சைனி 2 விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.