குழந்தையின் எடை

குழந்தை பிறந்துவிட்டது என்ற தகவல் சொன்னதும் அனைவரும் கேட்கும் முதல் கேள்வி என்ன குழந்தை என்பதாக இருக்கும், அடுத்த கேள்வி, என்ன எடை என்பதுதான். இதில் இருந்தே குழந்தையின் எடை மிகவும் முக்கியம் என்பதை உணரலாம்.


·         நம் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு குழந்தை இருக்கவேண்டிய சராசரி எடை 2.5 கிலோவில் இருந்து 3.00 கிலோ ஆகும்.

·         இந்த எடைக்கு குறைவாக பிறப்பது மட்டும் சிக்கல் அல்ல, இந்த எடைக்கு அதிகமாக பிறப்பதும் கவலையளிக்கும் விஷயம்தான்.

·         2 கிலோவுக்கு குறைவாக இருக்கும் குழந்தைகளை ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகளாக கருதவேண்டும்.

·         1.5 கிலோவுக்கும் குறைவாக குழந்தைகள் இருப்பது தெரிந்தால், அது அதிக ஆபத்தான நிலையில் இருக்கும் குழந்தையாக கருதப்பட்டு முழுநேர கவனிப்பு தேவைப்படும்.

குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் உடல் இயக்கங்கள் சரியான முறையில் இயங்கும் வரை, இந்தக் குழந்தைகளை நியோனடல் இன்டென்சிவ் கேர் யூனிட்டில் Neonatal intensive care unit (nicu)   வைத்து பாதுகாக்க வேண்டும்.