தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த 10 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள்! பிரித்து மேயப் போகும் அதி கனமழை! எங்கெங்கு தெரியுமா?
தமிழகத்தில் சில நாட்களாகவே உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் தஞ்சாவூர், திருவாரூர் கடலூர் ,நாகப்பட்டினம் , புதுக்கோட்டை, அரியலூர், ராமநாதபுரம் , சிவகங்கை , நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சார்ந்த பகுதியில் நல்ல கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையை பொறுத்தவரையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை மற்றும் நாளை மறுநாள் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
கடற்கரை பகுதிகளில் சூறை காற்று வீசுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளதால் இன்று மீனவர்கள் தென் மேற்கு வங்க கடல் மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நாளையும் காற்றின் அளவு அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதால் மாலத்தீவு , குமரிக்கடல், தென்மேற்கு வங்க கடல் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.