ரோஜா பூ தலையில் வைக்கவா… நோயை தீர்க்கவா!!

இந்திய நாட்டின் அடையாளமாகவே ரோஜா பூவை சொல்லலாம். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னரே இந்தியாவில் ரோஜாப்பூ வளர்ந்துள்ளது. இளஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள், பச்சை, கருஞ்சிவப்பு போன்ற பல்வேறு நிறங்களில் ரோஜாக்கள் வளர்கின்றன.


அழகுக்கும் நறுமணத்துக்காகவும் வளர்க்கப்படும் ரோஜாப்பூவில் ஏராளமான மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன. அதனால் இப்போது உலகெங்கும் ரோஜாப்பூ வளர்த்து பயன்படுத்தப்படுகிறது.

• வியர்வை காரணமாக உடல் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் குளிக்கும் நீரில் ரோஜா அல்லது ரோஜாவில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் கலந்து குளித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.

• ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டு வர வயிற்றுக்கடுப்பு, சீதபேதி போன்றவை நீங்கி உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.

• ரோஜாப்பூவை கஷாயம் செய்து குடித்துவந்தால் உஷ்ணத்தால் உண்டாகும் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் தீரும்.

• ரோஜாவின் மணம் மனதுக்கு புத்துணர்ச்சியும் நரம்புகளுக்கு சுறுசுறுப்பும் தரக்கூடியது.

பித்தம் காரணமாக கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் ரோஜா பூ சாறு எடுத்து குடித்துவந்தால் நிவாரணம் கிடைக்கும்.