திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் அந்த மூன்று பேரை கைது செய்வோம்! பகிரங்கமாக அறிவித்த ஸ்டாலின்! யார், யார் தெரியுமா?

தருமபுரியில் நடைபெற்ற திமுக பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டததில் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியை வெளுத்து வாங்கினார்.


பல ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது, தியாகம் என்றால் என்ன, போராட்டம் என்றால் என்ன, சிறை என்றால் என்ன, சித்ரவதை என்றால் என்ன என்பதை அறியாதவர்கள் எல்லாம் என்னை கேள்வி கேட்க எந்த அருகதையும், தகுதியும் இல்லாதவர்கள்.

வேலைவாய்ப்பு பற்றி வெளிநாடுகளுக்கு போய் பொய் சொல்கிறார். தமிழக அமைச்சரவையில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்பவர்கள் இரண்டு மணிகள்..

தங்கமணி.. வேலுமணி.. அதனால் எடப்பாடி அந்த இருவரையும் தனது இரண்டு கண்களாக பாவிக்கிறார். எடப்பாடியின் கஜானாவே இவர்கள் தான்.

வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சர் அல்ல, ஊழல் ஆட்சித் துறை அமைச்சர். டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை என்ற பெயரில் மாதம் ரூ.100 கோடி என பில் போட்டு 5 ஆண்டுகளில் ரூ. 6 ஆயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார்கள்.

குப்பை முதல் குடிநீர் வரை.. வண்டி வண்டியாக ஊழல் செய்யும் மாமணிதான் அமைச்சர் வேலுமணி. மின்வாரிய உதிரி பாகங்கள் முதல் பணியாளர் நியமனம் வரை.. மலை அளவு ஊழல் செய்து வரும் தங்கமான மணிதான் அமைச்சர் தங்கமணி 

திமுக ஆட்சிக்கு வந்ததும் எடப்பாடியுடன் சேர்த்து கைதாகப் போகிற முதல் இரண்டு பேர் வேலுமணியும், தங்கமணியும்தான். இது ஒரு கிரிமினல் கேபினட். அரசாங்கம்தான் ரெய்டு நடத்த வேண்டும், ஆனால் இங்கே அரசாங்கமே ரெய்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. 

இது ஒரு பினாமி அரசு, கிரிமினல் அரசு, உதவாக்கரை அரசு. விலைவாசி விஷம் போல் உயர்கிறது, வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது, தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன, மக்களிடம் பணப்புழக்கம் இல்லை... 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.