வெள்ளிக் கிழமை நகம் வெட்டினால் என்னாகும் தெரியுமா? சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!

வெள்ளிக்கிழமை ஒரு அற்புத நாளாகும். வெள்ளிக்கிழமை என்றால் கோவில்களுக்கு செல்ல உகந்த ஒரு நாள் என்று சொல்லலாம்.


பிற நாட்களை காட்டிலும் இந்த நாள் புனிதம் நிறைந்த நாளாகும். அம்மனுக்குரிய நாளாக இந்த நாள் கருதப்படுகிறது. அம்மனுக்குரிய இந்த நாளில் ஒரு செயலை தொடங்கினால் அது வெற்றியாகவே அமையும். நல்லதொரு தொடக்கத்திற்கு உகந்த கிழமைதான் வெள்ளிக்கிழமை. அற்புதம் நிறைந்த இந்த நாளில் நகம் வெட்டக்கூடாது என்று சொல்வது ஏன் தெரியுமா?

நகம் வெட்டுவதற்கு நாள் என்ன, கிழமை என்ன என்று பலரும் சொல்வர். ஏன் இப்படி முன்னோர்கள் சொன்னார்கள் என்று யாரும் ஆராய்ச்சி செய்வதில்லை. அதை பற்றி தெரிந்து கொள்வதுமில்லை. முன்னோர்கள் ஏன் இப்படி சொன்னார்கள்? என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

பொதுவாக சனிக்கிழமையை பெருமாளுக்கு உகந்த நாளாகவும், வெள்ளிக்கிழமையை மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளாகவும் கருதுவது மரபு. மகாலட்சுமிக்குரிய அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்கக்கூடாது என்பது ஐதீகம்.

நகம், முடி இரண்டுமே வெட்டினால் வளர்வது என்றாலும் அதுவும் நமது உடலில் ஓர் அங்கமாகும். பொருளை இழப்பதே தவறு என்றால் உடல் உறுப்பை இழப்பது இன்னும் அதிகப்படியான தவறு அல்லவா? அதனால்தான் வெள்ளிக்கிழமை நகம் வெட்டக்கூடாது என்று கூறுகிறார்கள்.

இது நம்பிக்கையின் அடிப்படையில் உருவான பழக்கமே தவிர மனுநீதி போன்ற சாஸ்திரங்களின் அடிப்படையில் தோன்றியது கிடையாது.

பிற்கால சாஸ்திர நூல்களில் இந்த விஷயம் சேர்க்க பட்டதே தவிர முன்பு உள்ள சங்கதி அல்ல சாஸ்திரத்தில் சொல்லபடாததை கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்க கூடாது பெரியவர்கள் சொல்வதும் கூட ஒருவகை சாஸ்திரமே.

மேலும் இன்றைய காலத்தில் மாய மந்திரங்கள், பில்லி, சூன்யம் போன்ற வேலையாடுகள் அதிகமாக நடந்து வருகிறது. நமது நகம் மற்றும் முடிகளை எடுத்து பில்லி, சூன்யம் போன்ற வேலையாடுகள் செய்து விடுவார்களோ என்ற பயமும் வீட்டுக்கு வெளியில் நகம் வெட்டக்கூடாது என்பதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது..