வேறு நெட்வொர்க்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் பேசலாம்! ஏர்டெல், வோடாஃபோன் புதுப் பிளான்!

வேறு தொலைதொடர்பு நெட்வொர்களுக்கும் அளவின்றி பேசலாம் என்ற திட்டத்தை ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.


டிசம்பர் மாதம் தொடக்கத்தில் தொலைதொடர்பு நிறுவனங்கள் அழைப்பு மற்றும் இணைய வசதிகளின் கட்டணத்தை 42  சதவீதம் வரை உயர்த்தின. இதிலும் வாடிக்கையாளர்களுக்கு பிற நெட்வொர்க்குக்கு 3000 நிமிடங்கள் வரைதான் இலவசமாக பேச முடியும் என்ற வரையறையும் வகுக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதளவில் அதிருப்தி அடைந்தனர். 

இதையடுத்து வாடிக்கையாளர்கள் தங்களை விட்டு செல்லாமல் இருப்பதற்காக ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 

அதாவது, பிற நெட்வொர்க்குக்கு வகுக்கப்பட்டிருந்த அழைப்பு வரவில்லை நிறுவனங்கள் நீக்குவதாக அறிவித்துள்ளன. இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஜியோ நிறுவனமானது, "ஆல்-இன்-ஒன் பிளான்" என்ற திட்டத்தின் மூலம் பிற நெட்வொர்க்குகளில் காட்டிலும் 5 மடங்கு இலவச அழைப்புகளை தருவதாக அறிவித்துள்ளது.

இதனால் அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் சிறிதளவு நிம்மதி அடைந்துள்ளனர்.